நாடு திரும்பும் அபிநந்தன் இந்திய மக்கள் ஆவலோடு வரவேற்பு!

இன்று நாடு திரும்பும் விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் வெள்ளிக் கிழமை விடுதலை செய்யப்படுவார். பாகிஸ்தான்  நாட்டு பிரதமர் இம்ரான்  கான்  வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக் கூறியது இதனை  கருத்தில் கொண்டு அபிநந்தனை திருப்பி அனுப்ப படுகின்றார். 

எந்த ஒரு ஒப்பந்தமும் நிபந்தனையும் இன்றி அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. 



ஜம்மு  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவொல் ஜெய்ஜ்-ஏ-முகமது அமைப்பின்  பயங்கரவாத தாக்குதலை அடுத்து 40 வீரர்கள்  வீரமரணம் ஆனார்கள். தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது  அமைப்பு பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பாலாகோட், முசாஃபராபாத்,   சகோட்டி ஆகிய இடங்களில் பதுங்கியுள்ள தகவல்கள் இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை அடுத்து  பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய விமானப் படையானது   பயங்கரவாதிகளுக்கு எதிரான  தாக்குதலை  அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. 

இந்த தாக்குதலில்  300க்குப் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்படட்னர். இதற்கு பதிலடியாக ஜம்மு பிராந்தியத்தில் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானின் 20 அதிநவீன எப்-16 ரக போர்  விமானங்கள் புதன் காலை ஊடுருவின அதனை வழிமறித்து இந்திய  என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். 

இந்திய விமானப்படையின் மிக-21 ரக விமானம் ஒன்று  சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானி அபிநந்தனை வர்த்தமான்  பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கி கொக்டார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான   பதற்றம் நடந்தேரியது.   பாகிஸ்தான் போர் விமானங்களால் இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த  விமானி அபிநந்தன் அவர்கள் பாகிஸ்தானிடம் பிடிப்பட்டார். அபிநந்தன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர் நாடு திரும்ப இந்தியா  தூதரக ரீதியில் அனுகியது. இந்தியாவிடம் நட்பு பாராட்டவே பாகிஸ்தான்  விரும்புகின்றது இதன் பொருட்டே பாகிஸ்தான்  அமைதி நடவடிக்கை கருதியே அபிநந்தன் அவர்கள் இன்று    லாகூர் அழைத்து வரப்பட்டு வாகா எல்லை  வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

இதனை அடுத்து அவர் விமானம் மூலம் டெல்லி அல்லது மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார். இன்று அபிநந்தன்  வர்வேற்க சென்னையில் இருந்து பெற்றோர்கள் மற்றும்  மனைவி வாகா செல்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்தனர் என்பது ஆகும்.

மேலும் படிக்க:


Post a Comment

0 Comments