அபிநந்தனை வைத்து ஆட்டத்தை நிறுத்த பாக் முயல்கிறது, அவர் வந்துவிடுவார் இருநாடுகளிலும் இயல்பு நிலை திரும்பும்!

அபிநந்தன் அவர்களை தங்கள் கஸ்டடியில் வைத்து இந்தியாவின் கோபத்தை குறைக்க பாகிஸ்தான் திட்டமிடுகின்றது.  இந்தியாவுடன்  சண்டையிட விருப்பமில்லை எனவும் அதனை உணர்த்தி கூடிய  விரைவில்  அபிநந்தனை அனுப்பபடுவார் என தெரிகின்றது.

இந்தியர்களின் ராணுவ பாசம் பாகிஸ்தானுக்கும் தெரிந்துவைத்துள்ளது. இதனை வைத்து இப்பொழுது காயை நகர்த்துகின்றது. பிப்ரவரி 13 இல் புல்வாமாவை பயங்கரவாதிகள் தாக்க அதனை அடுத்து பிப்ரவரி 27 ஆம்  நாள் 3.30 மணிக்கு இந்தியா ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எடுத்து நடத்தி  முடத்தது. 

பாகிஸ்தானிடம்  பிடிப்பட்ட இந்திய  விமானப்படை அபிநந்தன்  அவர்களை பாதுகாப்பாக பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க  இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். 



அபிநந்தனை ஒப்படைக்குமாறு  இந்தியா பாகிஸ்தான் துணை  தூதரை அழைத்து வலியுறுத்தியுள்ளது. தூதரக நடவடிக்கையில் மத்திய  அரசு இறங்கி உள்ளது. 

இந்தியாவை நோக்கி வந்த நேற்று காலை பாகிஸ்தானின் எப் 16 ரக விமானங்கள் பத்து  எண்ணிக்கையில் நவஷாரா விமானதளம்  நோக்கி வந்ததை எஸ்யூ 30 எம்கேஐ  மற்றும் 21 வகையைச் சேர்ந்த 2 விமானங்கள் 
ஸ்ரீநகர் மற்றும் அவந்திப்புரா விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டன. அப்பொழுது மிக் 21  வகையை சேர்ந்த இந்திய விமானம் காணாமல் போனது . அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து விமானி சிறைப்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது குறிப்பிடப்பட்டது. அவற்றில் அபிநந்தன் இருந்தார் அவரை வைத்து இந்திய  வியாபார ஊடகங்கள் ஹாட் செய்திகள் வெளியிட்டு மக்களிடம் கிலியை கிளப்புகின்றது. போர் அபாயம் சூழல், அதுஇதுஎது என விளையாட்டு காட்டியது. இதனை மிக  இலகுவாக எடுத்து  நிதானமாகவும் கூலாகவும் அபிநந்தன்  விளக்கி நாட்டு மக்களுக்கு தான் பாதுகாப்பாக உள்ளதை விளக்கினார். அரசும்  அபிநந்தன் அவர்களை மீட்க பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றது.

மேலு  படிக்க:

விரைவில் நாடு திரும்புவார் அபிநந்தன், நாடே காத்திருக்கின்றது, பாகிஸ்தானில் தான் நன்முறையில் நடப்படுவதாக தகவல்!

Post a Comment

0 Comments