தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் காலியாகவுள்ள  பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் மாசுக் கட்டுபாடு வாரியத்தில் காலியாகவுள்ள பொறியாளர் மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 224 ஆகும். 

உதவி பொறியாளர் பணியிடங்கள்  மொத்த எண்ணிக்கை 73
சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் எண்ணிக்கை  -60 
இளநிலை உதவியாளர் எண்ணிக்கை-36 
தட்டச்சர் எண்ணிக்கை  - 55  

18 வயது முதல் 30 வயது வரை அதிகபட்சம் 35 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதியாக  சிவில் இன்ஜினியரிங்,  கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை  சூழலியல் படிப்பு ஆகும். 

சுற்றுசூழலியல் ஆராய்ச்சியாளர் வேதியியல், உயிரியல், விலங்கியில் சூழலியல், சுற்றுசூழல் அறிவியல், நுண்ணுயிரியல் போன்ற பாடப்பிரிவில் பட்டப்படிப்பு  பெற்றிருக்க வேண்டும். 

இளநிலை உதவியாளர் பணிக்கு  பட்டப்படிப்பு மற்றும் 6 மாத டிப்ளமோ  படிப்பு முடித்திருக்க வேண்டும். 

தட்ட்சசர் - பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சசுத் தேர்வில் உயர்வகுப்பில் தேர்ச்சி யுடன் 6 மாத  டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளமாக ரூபாய் 19, 500 முதல் 1,19, 500 வரை பணிகளுக்கு ஏற்ப சம்பளங்கள் மாறுபடும். 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச் 25, 2019 ஆகும். 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு நாள் ஏபரல் 23, 2019 ஆகும்.


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments