அனைத்தும் நாளும் அவளுடையதே அதுவே அர்த்தமுள்ளவை!

பெண் உலகின் அற்புத படைப்பு, அவளின்றி அணுவும் அசையாது பெண்மைக்கு என்றும்  இந்த பிரபஞ்சத்தின் ஜீவன் ஆவாள். 

பெண்மைக்கு நாம் சிறப்பு  சேர்த்து அவளுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 
பெண்னை அறிவாக நோக்கும் தேசம் வளர்ந்த தேசம் ஆகும்.  

மகளிர் தினத்தையொட்டி ஏர் இந்திய நிறுவனத்தில்  52 விமானங்களை, பெண் விமானிகளே இயக்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக முழுவதும் இருக்கும் பெண்களை போற்றும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  மகளிர் தினத்தையொட்டி இன்று ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை பெண்களே இயக்குவார்கள் என்று அறிவித்துள்ளது. 



நியூயார்க், வாஷிங்டன், லண்டன் உள்ளிட்ட 12   உலக நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்க உள்ளனர். இவற்றில் விமானி மற்றும் விமானப் பணிப்பெண் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். இதனை அனைவரும் பாரட்டி வருகின்றனர் என்பது சிறப்பு ஆகும். 

பெண்மைக்கு இந்திய தேசத்தில் தனித்துவம் வாய்ந்த பெயர் இருக்கின்றது. பெண் சக்தியாக ஆற்றல் வாய்ந்தவளாக இருக்கின்றாள் அவளின் ஆளுமை உலகை மற்றும் புவியை  காக்கின்றது. பெண் பொறுமையின் சிகரம். இதை இந்த சமுதாயம் உணர்ந்து அவளுக்குரிய இடத்தை வழங்கி  கௌரவிக்கின்றது. 

பெண்களுக்கு எதிரான சமூக மூடத்தனமான கட்டுப்பாட்டுகள் மற்றும் பாலியல் தொல்லைகள்,  பெண் ஏளனப் பார்வையும் இன்றைய பாதுகாப்பான காலங்களிலும் அதிகளவில் நடைபெறுகின்றது. அதற்கு காரணம ஊடகங்கள் இன்னப் பிற சமூக கட்டமைப்புகள்  இவை அனைத்தும் மாற்றம் பெற வேண்டும். 

பெண்ணுக்கு என்று தனியான நாள் போற்றுவதைவிட அனைத்து நாளும் அவளுடைய நாளாக அவளுக்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்தால் நலம் பயக்கும்.  

உலகத்தின் ஒளி பெண் கணினி யுகத்தின் கண் நமது பெண்..
கலிபோர்னியாவில் கவிதா இருந்து கொண்டு கல்லிப்பட்டியை கவனத்தில் வைத்து வாழ்பவள் பெண்..  

பெண்ணவள் நினைத்தால் காதல் கடந்து காமத்தை துறந்த துறவியாக வாழவும் துணிவாள்... 
அறிவை விசாலமாக்கி ஆன்மாவை தெளிவாக்கி 
அதில் ஆயிரம் கனவுகளை
 அடுத்தவருக்கென்றே வைத்து வாழ்பவள்.. 

பெண் என்ற ஆன்ம ஒளி இல்லையெனில் 
உலகம் என்றோ அஸ்தமித்திருக்கும்... 

உணர்வாய் மனிதா உயிரை கொடுத்து உனைப் படைத்து 
உடைமை கொடுத்து 
உலகுக்கு தந்து இன்று சரிநிகராய் நிறுத்து என சாய்ந்து நிற்பவளுக்கு
 நீ சாற்றும் காணிக்கை கண் பார்த்து பேசி கணிவு கொண்டு நேசி ... இது போதும்... இந்த பெண்மைக்கு....


Post a Comment

0 Comments