மக்கள் தொகையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணிகள்:
போட்டி தேர்வில் கேட்க வாய்ப்பு இருக்க கூடிய கேள்வி பதில்கள்:
- பிறப்புவீதம் என்பது ஓர் ஆண்டில் 1000 பேருக்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
- இறப்புவீதம் என்பது ஓர் ஆண்டில் 1000 பேருக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்ற எண்ணிக்கையைக் குறிக்கும்.
- வெளிநாட்டில் குடியேறுதல், உள் நாட்டில் குடிப் பெயர்ச்சி என இடப்பெயர்வுகள் இருவகையாகப் பிரிக்கலாம்.
- நம் நாட்டு மக்கள் வெளிநாட்டில் குடியேறும் சென்று குடியேறும் பொழுது நம்நாட்டு மக்கள் தொகையின் அளவு குறைகிறது.
- பிற நாட்டும் மக்கள் நம் நாட்டில் குடியேறுவது உள்நாட்டுக் குடிப்பெயர்ச்சி எனப்படும். இதனால் நம் நாட்டு மக்கள் தொகையின் அளவு அதிகரிக்கிறது.
மக்கள் தொகை வெடிப்பிற்கான காரணிகளை :
- கல்வியறிவின்மையுடன் அதிக பிறப்பு வீதத்திற்கான காரணங்களுக்கான ஒன்றாகும்.
- இந்திய பெண்களின் திருமண வயது குறைவு மக்கள் தொகை வெடிப்பிற்கான காரணங்கள் ஆகும்
- ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணம் பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.
- கட்டாயத் திருமணம் மற்றும் சமுதாயக் சமயக் காரணங்களாலும் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
ராபர்ட் மால்ஸ்:
- தாஸ் ராபர்ட் மால்தஸ் உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் ஆவார்.
- மக்கள் தொகை வளர்ச்சியால் எழும் சிக்கல்களை பற்றி முதன் முதலில் மக்கள் தொகை கோட்பாடுகள் என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டார்.
- மக்கள் தொகை கோட்பாடு குறித்து 1798இல் வெளியிட்டார்.
- பல குறைபாடுகள் கொண்டதாகவே அக்கோட்பாடுகள் அமைந்திருந்தன.
- உணவு உற்பத்தி மக்கள் தொகை பெருக்கல் வீதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும் அதிகரிக்கிறது என்ற மால்தஸின் கோட்பாடு தெரிவிக்கின்றது .
மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டின் குறைபாடுகள் :
- தரிசான நிலங்களை புதிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்பதை கணக்கிடவில்லை.
- ஒரு நாடு தன்னுடைய அளவுக் அதிகமான உற்பத்தி செய்த பொருளை பிற நாடுகளுடன் பரிமாறிக் கொள்கிறது. தற்காலத்தில் போக்குவரத்து, பன்னாட்டு வியாபார சக்திகள் அனைத்து நாட்டுகளையும் எளிதில் இணைக்கின்றது.
- மால்தஸின் கூற்றுப்படி உணவு உற்பத்தி கூட்டல் வீதத்தில் உயருகின்றது என்ற கூற்றும் மறுக்கப்பட வேண்டியதே ஆகும்.
உத்தம் அளவு கோட்பாடு :
- ஒரு நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்க்கும் மொத்த செல்வத்திற்க்கும் இடையேயுள்ள தொடர்பு தான் மக்கள் தொகை பற்றிய உண்மையான கோட்பாடு ஆகும் என கூறுவது உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாடு ஆகும்.
- 1924-இல் எட்வின் கேனன் என்பவரால் உத்தம் அளவு மக்கள் தொகை கோட்பாடு வெளியிடப்பட்டது. எட்வின் செல்வம் என்னும் நூலின் மூலம் அவர் உத்தம் அளவு கோட்பாடை வெளியிட்டார்.
- மக்கள் தொகை அளவிற்கும், செல்வ உற்பத்தியின் அளவிற்கும் உள்ள தொடர்பை இந்தூல் விளக்குகின்றது.
- எட்வின் கேனனின் உத்தம மக்கள் தொகை கோட்பாடு மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டை விட மிகுந்த செயல் திறனுடையது.
இந்திய தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கம்:
- தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் மக்கள் தொகையை ஒரு நிலைப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கமாகும்.
போட்டி தேர்வில் கேட்க வாய்ப்பு இருக்க கூடிய கேள்வி பதில்கள்:
- இந்திய தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கம் யாது?
- மால்தஸ் மக்கள் தொகை கோட்பாட்டின் குறைகள் யாவை?
- எட்வின் கேனனின் கோட்பாட்டின் பெயர் என்ன?
- உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் யார்?
- பெண்ணின் திருமண வயது குறைவு எதன் காரணமாக அமைக்கின்றது?
- செல்வத்தை மக்கள் தொகையோடு கணக்கிடும் கோட்பாட்டின் பெயர் என்ன?
0 Comments