டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ் இலக்கண குறிப்புகள் படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்!

தமிழ் மொழி பாடத்தில் 100  கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் பொழுது எளிதாக போட்டி தேர்வை வெல்லலாம். போட்டி தேர்வை வெல்ல தமிழ்  மொழிப் பகுதி முக்கிய பங்கு வகிக்கின்றது. 


 

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-
எழுத்துக்கள் இரண்டு வகை - 2 ஆகும்.
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  ஆகும் (1. உயிர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
I. உயிர் எழுத்துக்கள் - 12 உள்ளன்.
வகைகள் - 2 கொண்டது
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
வகைகள் - 3 உள்ளன
வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்
சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்
2. பகுபதம்:-
பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம் வகைகள் - 2 
(1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)

பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்

இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
அகப்பொருள் உள்ள திணைகள் - 5 உள்ளன.
இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்

அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
3. உரிப்பொருள்:-
குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்து உண்டாகும் அன்பு ஆகும்.

4. யாப்பிலகணம்:-
யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

1. எழுத்து:-
எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
சீர்கள் எண்ணிக்கை - 30 கொண்டவை
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

5. அணி இலக்கணம்:-
அணி என்பதன் பொருள் - அழகு
அணிகள் வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
பொருளணி வருபவை - உவமை, உருவகம்

அணிகள் பின்வருமாறு:-
இல்பொருள் உவமையணி
ஏகதேச உருவக அணி
பிறிது மொழிதல் அணி
வேற்றுமை அணி
வஞ்சிப்புகழ்ச்சி அணி
இரட்டுற மொழிதலணி
சொற்பொருள் பின்வருநிலையணி
தற்குறிப்பேற்ற அணி
நிரல்நிறை அணி

மேலும் படியுங்க:

கற்கால மனிதன் அவனது வாழ்க்கை முறை குறிப்பு!

கற்கால மனிதன் வாழ்க்கை முறை குறிப்புகளின் வினா- விடை!

Post a Comment

0 Comments