8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஆபார வெற்றி ! லோகேஷ், குல்தீப் ஆபார ஆட்டம்!

வெற்றி  கணக்கை இந்திய அணி தொடங்கியது. விடிய விடிய கிரிக்கெட் ஜூரம் ரசிகர்கள் ஆரவாரம்.

மான்செஸ்டரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினர். ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானம் காட்டினார். மறுமுனையில் ஜோஸ்பட்லர் அதிரடியில் மிரட்டினார். 
அணியின் ஸ்கோர் 95 உயர்ந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

குல்தீப் யாதவின் மூன்றாவது ஓவரில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான இயான் மோர்கன்,  ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் அவர்களது விக்கெட்டை அடுத்தடுத்து காலி செய்தார். அடுத்து வந்த மொயீன் அலியை  ஹர்திக் பாண்டியா வெளியேற்ற இங்கிலாந்து அணி தடுமாறியது. அடுத்து வந்த டேவிட் வில்லே அதிரடியில் மிரட்டினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த ஜோஸ் பட்லரை குல்தீப் யாதவ் காலி செய்தார். சர்வதேச டி20 போட்டியில் இடக்கை  பந்துவீச்சாளர் 5 விக்கெட் கைப்பற்றுவது முதல்முறையாகும். அடுத்து வந்த கிரிஷ் ஜோர்டனை உமேஷ் யாதவ் வெளியேற்றினார்.


அதிரடியில் மிரட்டிய டேவிட் வில்லே  29 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் கைப்பற்றவில்லை. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 5வது பந்தில் ஷிகர்தவான்  டேவிட் வில்லே பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் லோகேஷ் ராகுல் களமிறங்கினார். ஒருபுறம் ரோகித் சர்மா நிதானமாக விளையாட மறுபுறம் லோகேஷ் ராகுல் அதிரடியில் மிரட்டினார். சிக்சரும் பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார். இவரது ஆட்டத்தை பார்க்கையில் இந்திய அணி 15 ஓவர்கள் எளிதில் வென்றுவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர்.
இந்திய அணி 12.4 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கோலி உள்ளே வந்தார். அதுவரை அதிரடியாக விளையாடிய இந்திய அணி பின்னர் 30 ரன்கள் எடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். 18.2 ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் கோலி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். லோகேஷ் ராகுல் 101 ரன்களுடன், வீராட் கோலி 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேவிட்  வில்லே மற்றும் அடில் ராஷித்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
அதிவேக 2000 ரன்கள்:
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் 56 இன்னிங்சில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். ஏற்கனவே குறைந்த போட்டிகளில் (27 இன்னிங்ஸ்) ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்  வீராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் 7 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.


குல்தீப் யாதவ்-5/24:
இந்திய அணி இந்த போட்டியை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த குல்தீப் யாதவ்க்கு  ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் இவர்தான்.
லோகேஷ் ராகுல் 2வது டி 20 செஞ்சுரி:
ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய வீரர்களில் சர்வதேச டி20 போட்டியில் லோகேஷ் ராகுல் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் மூலம் ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக ரன்களை விளாசினார். தற்போது அதே பார்மில் விளையாடி சர்வதேச டி20 போட்டியில் 2வது சதம் அடித்து அசத்தினார்.
Writtern By Toll Free.N

Post a Comment

0 Comments