நம்மில் பலரும் உடல் பருமன் குறைய வேண்டும் என்று பல முயற்சிகள் செய்திருப்போம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ முறைகளையும் கையாண்டு பலன் இன்றி சோர்ந்து போயிருப்போம். கீழே உள்ள வழிமுறையை சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியோடு கடைபிடித்தால் எளிதாக உடல் பருமனைக் குறைக்கலாம்.
ஆளி விதை, கொள்ளு, வெந்தயம், சீரகம் இந்த நான்கையும் பயன்படுத்தி எழிதாக உடல் பருமனைக் குறைக்கலாம். ஆளிவிதையும் கொள்ளும் அப்படியே எடுத்துக்கொண்டால் சிலருக்கு உடல் சூடு மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் எனவே அதனுடன் சரிவிகத அளவு சீரகம், வெந்தயம் சேர்க்கும் போது இந்த சூட்டை குறைக்கும். ஏனெனில் சீரகம் மற்றும் வெந்தயம் குளிச்சியான பொருள் என்பது நாம் அறிந்ததே.
ஆளி விதையை பற்றி பெரும்பன்மையானோர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு, பெரும்பாழும் மருத்துவமனைகளிள் உடல் பருமன் குறைய இதனையே ஃப்ளாக்ஸ் சீட்ஸ் என்ற பெயரில் இதனையே பரிந்துரை செய்கின்றார்கள். இந்த ஆளி விதையை நாட்டு மருந்து கடைகளில் எளிதாக பெறலாம். இதன் பயன்களைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்.
ஆளி விதை ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை கொண்டுள்ளது, எனவே களோரியின் அளவும் குறைவாகவே உள்ளது.
நார் சத்து மற்றும் 20% புரதச்சத்து உள்ளது. ஆதலால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம். லிக்னன்ஸ் என்னும் ஆன்டியக்ஸிடன்ட் இதில் அதிக அளவு உள்ளது, இது நேரடியாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கொள்ளுப் பருப்பின் பயன்களைப் பற்றி காண்போம்,
இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி, அதாவது எள்ளு சாப்பிட்டால் உடல் ஊக்கம் பெரும், கொள்ளு சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறையும் என்பது பொருள் ஆகும். கொள்ளு மாவுச்சத்து அதிக அளவு உள்ளது.
கொள்ளு இரும்பு, கால்சியம், மாலிப்டினம் உள்ளது, எவை தீங்கு ஆக்ஸிஜனை தடுத்து உயிரணுக்களை பாதுகாக்கிறது.
வெந்தயத்தின் மருத்துவப் பயன்கள்:
நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து போன்றவை உள்ளன.
கால்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருள்களும் உள்ளன.
தயாமின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ‘ஏ’ போன்றவையும் உள்ளன.
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:
சீர்+அகம்= வயிற்றுப்(அகம்) பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.கார்ப்பு, இனிப்பு சுவை உடையது, குளிச்சியானது.
செரிமானத்திற்க்கு பெரும் பங்கு வகிக்கிறது.
பயன்படுத்தும் முறையை காண்போம்:
சம அளவு ஆளி விதை, கொள்ளு, சீரகம், வெந்தயம்(உதாரணம்: நான்கும் தனித்தனியே 100கிராம்) எடுத்து அதனை தனித்தனியாக வறுக்கவும் வருத்த இவற்றை கலந்து பொடி செய்து தனியாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை தினமும் காலையில் நீரை கொதிக்க வைத்து அதில் இரண்டு ஸ்பூன் பொடியை சேர்த்து பருகி வந்தால் உடல் பருமனில் நல்ல மாற்றம் உண்டாகும்.
எலும்பிச்சை டீ :
எலும்பிச்சை பழச்சாறு, சுத்தமான தேன், இஞ்சி துண்டுகள், சீரகத்தை இணைத்து கொதிக்க வைத்து டீ மாதிரி செய்து கொதிக்க வைத்து குடிக்கலாம் ஆதனால் உடலில் உள்ள கொழுப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறும் உடல் எடை சீராக இருக்கும்.
கொழுப்பு குறையும் உடலில் உள்ள சத்துக்கள் தொடர்தலுடன் கொழுப்பு சத்து குறையும்.
WRITTEN BY MISS. SRIMATHI
WRITTEN BY MISS. SRIMATHI
மேலும் படிக்க:
0 Comments