நாட்டு வருவாய்:
உழவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்காற்றி நாட்டின் வருமானத்தைப் பெருக்க காரணம் நாட்டு வருவாய் ஆகும்.
பல்வேறு வகையான தொழிலாளர்களால் நாட்டின் வருமானம் பெருக்குவது நாட்டு வருவாய் எனப்படும்.
தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் என அழைக்கப்படும்.
பகிர்வு என்பது வருமானம் ஈட்ட முடியாதவர்களைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரம் அடிப்படை உற்பத்தியாகும்.
நுகர்வு:
மக்கள் சந்தையில் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது நுகர்வு என அழைக்கப்படும்.
சந்தையில் சில பொருட்கள் அதிகமாகக் குவியும் பொழுது அதன் விலை குறைகிறது.
பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக விலை அதிகரிக்கின்றது.
மக்களுக்கு தேவையான பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலமாகக் குறைந்த விலையில் வழங்குவது மாநில அரசாகும்.
நோபல் பரிசு:
நோபல் பரிசி பெற்ற ஆறாவது இந்தியர் அமர்த்தியாசென் இவர் வங்காளத்தில் சாந்திநிகேதனில் பிறந்தார். இவர் தனது நான்காவது வயதில் வங்காள பஞ்சத்தை நேரில் அனுபவித்தார்.
வறுமையும் வளர்ச்சியும் சம்மந்தமான ஆராய்ச்சிக்காக 1998-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இவர் பெற்றார்.
பொருளியலின் தந்தை:
பொருளியலின் தந்தை என ஆடம்ஸ்மித் அழைக்கப்படுகிறார்.
நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் வெளியீட்டிற்குப் பிறகே பொருளியலை நாம் முறைப்படுத்தப்பட்ட அறிவியலாக அறிகிறோம்.
மனித விருப்பங்கள்:
பொருளியல் மனித விருப்பங்களை பற்றியும் அவை நிறைவு செய்யப்படுவது பற்றியும் விளக்குகிறது.
சமுதாயத்தின் பிரச்சனைகளாகிய வேலையின்மை, வறுமை மருத்துவ உதவி, உற்பத்தி மற்றும் அரசின் கொளைகளை பற்றி பொருளியல் விளக்குகின்றது.
பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஒரு சமூக அறிவியல் எனபது ஆடம்ஸிமித்தின் கூற்றாகும்.
பகிர்வு:
உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும் அதாவது உற்பத்தி செய்த பொருட்களை பயன்பாட்டை பெறுகின்றோம்.
பயன்பாடு என்பது விருப்பங்களை நிறைவு செய்வதாகும்.
உற்பத்தி செய்யப்பட்ட்ட பொருட்களைப் பயன்படுத்த சந்தையில் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்வது நுகர்ச்சி எனப்படும்.
வருமானம் சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் அடிப்படை தேவைகள் பகிர்வு எனப்படும்
உற்பத்தி காரணிகள்:
'நிலம், உழைப்பு, மூலதனம், தொழிலமைப்பு ஆகியவை உற்பத்திக் காரணியாகும்.
உற்பத்தி என்பது பண்டங்களை செய்வது மட்டுமின்றி மருத்துவ ஆசிரியர் போன்ற பல பணிகளையும் உள்ளடக்கியதாக்கும்.
நிலத்திற்கு அளிக்கப்படும் வருவாய் வாடகை எனப்படும்.
உற்பத்தி காரணியாக உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலி ஆகும்.
மூலதனத்திற்கு கொடுக்கப்படும் வருமானம் வட்டி ஆகும்.
தொழிலமைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி இலாபம் எனப்படும்.
வினா விடைகள்:
1. உற்பத்தி காரணிகள் யாவை?
2 மூலதனத்தின் கொடுக்கப்படும் வருமானம் யாவை?
3 நுகர்வு என்றால் என்ன?
4 உற்பத்தி என்றால் என்ன?
5 ஆடம்ஸ்மித் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
6 பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
7 நாட்டு வருமானம் என்றால் என்ன?
மேலும் படிக்க:
0 Comments