நாளைய தலைகளே இன்றைய பிளஸ் 2 மாணவர்களே ஆல் தி பெஸ்ட்!

தமிழகத்தில் நாளை முதல்  தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில்  பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வானது  மார்ச் 1, 2019 நாளை தொடங்கி மாரச் 19  ஆம் தேதி முடிவடைகின்றது. 

தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 இல் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி முடிகிறது. பொதுத் தேர்வுக்காக அரசு 3000 வரை தேர்வு மையங்களை தயார் செய்து வைத்துள்ளது. 




2019 ஆம் ஆண்டில் 8, 87, 992  மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4,60,006 மாணவிகள் 4,00 101 மாணவர்கள் 2  திருநங்கையர்கள் 45 சிறைகைதிகள் மற்றும் 26, 885 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர் ஆகும்.
 ஒவ்வொரு பாடங்களுக்கும் 200 மதிப்பெண்கள் வீதம் 6 பாடங்களுக்கு 1200 மதிப்பெண்களுக்கு என இதுவரை தேர்வுக்கு தயாராகி வந்தனர். தற்பொழுது 100  மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிபெண்களுக்குத்தான் தேர்வு நடைபெறுகின்றது. 
 
தேர்வுக்கு தயாராக முன்பு சரியாக தூங்குங்கள் மாணவர்களே. 
எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் பயணியுங்கள் 
தேர்வு பயம் தேவையில்லை 
மனதை அமைதிப் படுத்தி   தியானம் செய்து எனக்கு எல்லாம் தெரியும் நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் என்று  நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

பேனாவை எழுதிப் பழக்கி கொள்ளுங்கள், 

சரியான நேரத்திற்கு தேர்வு அறைக்குச் செல்லுங்கள். 

தேர்வறையில் எக்ஸாம்  டூல்ஸ்களை   கவனமாக கையாளுங்கள். 

 தெரிந்த கேள்விகளுக்கு கேள்வி எண்ணையிட்டு விடை எழுதவும். 

முக்கியத்துவமான தேர்வு வாழ்கையின் அனைத்து கட்டங்களிலும்  கேட்கப்படும் முக்கிய வகுப்பு இது என்பது  புரிந்துதான் நீங்கள் தேர்வறைக்கு வந்துள்ளீர்கள் ஆகையால் சிறப்பாக  எழுதவும். 


மேலும் படிக்க:

பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களே உங்களுக்கான பதிவு!

Post a Comment

0 Comments