மாற்றத்தை தரும் சுற்றுலாவை அறிவோம் ஆர்வத்துடன் பயணிப்போம்!

சுற்றுலா என்பது நம்மை சுறுசுறுப்பாக்கு உலா ஆகும். ஊர் சுற்றும் வாலிபர்களை எப்பொழுதும் கவனித்துப் பாருங்கள் அவர்கள் தெளிவாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். படிக்கிறார்களோ இல்லையோ  ஆனால்  நிச்சயம் பட்டறிவு  பயணிப்பவர்களுக்கு எப்பொழுதும்   கிடைக்கும்.

பயணங்கள்  தரும் பாடம்: 
பயணங்கள் தரும் பாடங்களால்தான்  நாம்  தொடர்ந்து பயணிக்கின்றோம். நம் வாழ்வும் என்றும் பயணிக்கின்றது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது  பயண நேரத்தில் நாம்  புதிய மனிதர்கள் மற்றும் புதிய இடங்கள் சூழல்களை சந்திக்க நேரிடக்கின்றது. அப்பொழுது ஏற்படும் அனுபவங்கள் பல பாடங்களை கற்றுத் தருகின்றது. 


பயணங்கள்  புதிய  அனுபவங்களை கொடுக்கும். புதிய மனிதர்களை அறிமுகம் செய்யும். 

புதிய இடங்கள் புதிய பாடங்களையும், துணிகர  முடிவையும் எடுக்க கற்றுகொடுக்கும். 

மன உலைச்சல் கலைப்பை போக்குவதுடன் புத்துணர்ச்சியை தூண்டும்  புதிய நினைவுகளை உண்டாக்கும். 

நேர்ம்றையான எண்ணங்களை அதிகப்படுத்துவதுடன் மனிதம், இயற்கை குறித்த  விருப்பங்கள் வரும்.

புதிய கலாச்சாரம், பண்பாடு,   தட்ப வெட்பம் போன்ற சூழல்கள் மாற்றம் சுற்றுலா காலங்களில் மாற்றம் பெறுகின்றன். உடல் மற்றும் உள்ளம்  தொடர்ந்து செயல்பட வைக்கின்றன. 

பயணங்கள்  ஆண்மீகம், கோடை மற்றும் குளிர்கால சுற்றுலாக்கள், மற்றும் ஒரு நாள் பயணம், வார பயணங்கள்,   இயற்கை , விலங்குகள் காட்சியகங்கள், சீசன் பயணங்கள், உள்ளூர் சிறப்பிடங்கள் என பயணங்களுக்கு உகந்தவையாகும். 

பயணங்களால் மனிதர்களை சிறந்த பாடங்களை கற்றவராக உருவாக்குகின்றது.  எளிதாக எதையும் தெரிதலுடன், புரிந்து செயல்பட வைக்கின்றது. ஞானம் பெற்றவராக மாற்றுகின்றது. 

எந்தவொரு  இலக்கையும் உத்வேகம் கலந்த உந்துதலுடன் செயல்பட வைத்து அது குறித்த தொலைநோக்கு பார்வையை விரிவடையச் செய்கின்றது.   புத்திசாலிதனமாக முடிவெடுக்க வைக்கின்றது சுற்றுலா. 

நாம் மேற்கொள்ளூம் சுற்றுலாவில் நாம் புதிதாக காண்பவை அத்துடன் அவற்றை தொடர்ந்து உற்று நோக்கும் போது கவனிக்கும் திறன் பெருகுகின்றது.

நவீன காலத்தில் சுற்றுலா என்பது மகிழ்ச்சிக்கும், மாறுதலுக்கும் தேவையான ஒன்றாகவுள்ளது.

சுற்றுலா செல்வது மனித வாழ்வினை மறுமலர்ச்சியடையச் செய்கின்றது. சிலேட் குச்சி உங்களுக்கு சுற்றுலா குறித்து தொடர்ந்து பதிவிடவுள்ளது. ஆதலால் சிலேட் குச்சியின் பதிகளை படியுங்கள் பயன்பெறுங்கள். 

Post a Comment

0 Comments