பொதுத் தேர்வு காலம் மாணவர்களே 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது. தேர்வுகேற்றார்ப் போல் டென்சனும் நெருங்கும். பொதுத் தேர்வு நேரத்தில் மதிபெண்கள் குறித்து வீட்டிலுள்ளோர்கள் மற்றும் பள்ளிகளில் பல்வேறு இலக்குகள் உள்ளுக்குள் இருக்கும் ஆனால் அதனையெல்லாம் விட இப்பொழுது தேவையானது தேர்வை எப்படி எதிர்கொள்வது.
மார்ச் மாதம் தேர்வு தொடங்கவுள்ளது. ஆங்கேங்கே வெயில் கொடுமை அதிகரித்துவிட்டது. அது குறித்து கவலை வேண்டாம். நன்றாக படியுங்க நம்பிக்கையோடு படியுங்க. நல்ல நீர் ஆகாரம் குடிங்க உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
நீர் ஆகாரத்தோடு பழச்சாறு, எலும்பிச்சை சாறு, மோர் போன்றவற்றை மாற்றி ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிங்க உடலும் மனசும் புத்துணர்ச்சியோடு இயங்கும்.
மாணவர்களே தேர்வு கால ரிவிசன் முக்கியம், இக்காலத்தில் கையில் போன் வைத்திருக்க கூடாது. ஆசிரியர்கள் எதுவானாலும் போர்டு பயப்படுத்துங்க பெற்றோர்களிடம் போனில் பேசுங்க வாட்ஸ் குரூப்பில் ரிவிசன் குறிப்புகள் கொடுக்காதீர்கள். மொபைல் போனில் எவ்வளவு நல்லது உள்ளதோ அவ்வளவு தீங்கும் உண்டு. மாணவர்களின் கவனச் சிதறலுக்கு அதிக வாய்ப்புகள் மொபைல் போன்கள் கொடுக்கும்.
தேர்வை வெல்ல சும்மா படிக்கிறது, ரிவிசன் செய்வது மட்டும் பத்தாது முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். முக்கியத்துவம் கொடுத்து செய்யும் எந்த செயலும் நினைவில் நிலைத்து நிற்கும் வெற்றியுடன் செயல்பட வாய்ப்பாக இருக்கும்.
தேர்வுக்கு தேவையான டூல்ஸ் எல்லாம் இப்பவே வாங்கி வையுங்கள், தேர்வு நேரத்தில் அது இல்லை இது இல்லை, அதை மறந்துட்டேன் என்ற தேவையற்ற டென்சன்கள் இல்லாமல் இருக்கலாம்.
வேகவைத்த உணவுகள், பருப்பு வகைகள் சாப்பிடுதல் சிறந்தது, காலார நடந்தால் மன உலைச்சல் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
பாஸிட்டாவான வார்த்தைகள் நிறைந்த பாட்டுக்களை கேளுங்கள், உத்வேகம் அதிகமாக கிடைக்கும்.
தொல்லைதரும் தொல்லைக்காட்சி பார்ப்பதை அறவே விடவும். தேர்வுகாலம் முடிந்து எதுவானாலும் பார்க்கலாம்.
மேலும் படியுங்க:
0 Comments