விளக்கு ஒளி வாழ்வின் ஒளி உண்டாக்கும். நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை உண்டு செய்யும். அப்படிப்பட்ட விளக்கு ஏற்றுதலில் உள்ள தத்துவம் நாம் முந்தைய பதிவில் கண்டோம்.
விளக்கின் வகைகள்:
நமது நாட்டில் விளக்கின் வகைகளாக கூறப்படுபவையாக மண் விளக்கு, காமாட்சி விளக்கு, ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு, வெள்ளி விளக்கு, ஐம்பொன் விளக்கு, ஆதம் விளக்கு. எலும்பிச்சையில் இடப்படும் விளக்கு, அரிசி மாவு, தேங்காய் மூடி, கோதுமை மாவு போன்றவற்றில் விளக்குகள் மக்களால் ஏற்றப் பட்டு தங்களுடைய வேண்டுதல்கள் செய்கின்றனர்.
திரி வகைகள்:
திரி பொதுவாக காட்டன் எனப்படும் பஞ்சினால் வெண்மை நிறத்தில் ஏற்றப்படுகின்றது. தாமரைத் தண்டுத் திரி, வாழைத் தண்டு திரி, சிவப்புநூல் திரி, மஞ்சள் நிற திரி, மூலிகைத் திரி, போன்ற திரிவகைகள் பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப விளக்கில் பொருத்தி தீபம் ஏற்றுகின்றனர்.
எண்ணெய்:
விளக்கேற்ற அவசியமாக பின்ப்பற்றுகின்ற பொதுவான எண்ணெய் நல்லெண்ணெய்,நெய் மற்றும் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பு எண்ணெய், விளக்கெண்ணெய்கள் ஆகிய எண்ணெய் வகைகள் பக்தர்களால் முனனோர்களாலும் பின்ப்பற்றப்பட்ட வந்த எண்ணெய் வகைகள் ஆகும்.
விளக்கேற்றும் பொழுது மக்கள் பலருக்கும் பல தேவைகள் இருக்கும். மேலே கூறப்பட்ட திரி மற்றும் எண்ணெய் விளக்குகள் மூன்றும் பக்தர்களின் தேவை மற்றும் வேண்டுதலுக்கு ஏற்ப விளக்கானது ஏற்றப்படுகின்றது.
தினமும் அதிகாலை எழுந்து 4 மணிமுதல் 6 மணிக்குள் கைக் கால் முகம் கழுவி ஒரு அகல் விளக்கேற்றி வேண்டினால் வேண்டியது வேண்டியவாறே கிடைக்கும். அனைவரும் குளித்தப் பின் ஏற்றினால் மிகுந்த நலம் பயக்கும். எனினும் குளிக்க முடியாவிட்டால் காலை கை, கல முகம் கழுவி ஒளியுடன் துவங்கும் நாள் சிறப்பாக இருக்குமென முன்னோர்களால் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க:
0 Comments