நாடும் முழுவதும் சிஆர்பிஎப் வீரர்களுக்காக அஞ்சலி!

காஷ்மீரில் புல்வாமா மாவட்ட தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரிலிருந்து பிப்ரவரி 14 ஆம் தேதி  வீரமரணம் அடைந்த வீரர்கள் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டு தேசிய கொடியுடன் அணிவகுத்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.  பாகிஸ்தான் கொடியை தீ வைத்து எரித்தும் மக்கள் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவ்வாறே பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் குறித்து வெளிவந்த செய்தியானது விடுதலை போராட்டவாதிகளின் தாக்குதல் என செய்திகள் வெளியிட்டு பெருமைப்பட்டு கொண்டுள்ளது, இது வேதனையை உருவாக்குவதுடன் பாகிஸ்தான் மீதான கோவத்தை  அதிகரிக்கச் செய்கின்றது. இதற்ககு ஏற்றார்ப் போல் பாகிஸ்தானை உலக நாடுகள் கண்டித்துள்ளன. இந்தியாவும் இது குறித்து பாகிஸ்தானிடையேயுள்ள உறவை  ரத்து செய்ய நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். 



ராணுவவீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களுக்கான  வீரமரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு செயல்பட்டு வருகின்றது. 

டெல்லி கொண்டு வரபட்ட இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள், வீரர்கள் சார்ந்த பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றது. பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் நேரடி அஞ்சலி செலுத்து வருகின்றனர். 

இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரும் உடலும்  அவர்களின் பகுதிக்கு அனுப்பபட்டுள்ளது. இன்று இருவரின் உடலும் வந்து சேரும், மேலும்  இரு தமிழக வீரர்களின் உடல்கள்   நல்அடக்கம் செய்யப்படும்.

மேலும் படிக்க:

சிங்கத்தை சீண்டியுள்ள பயங்கரவாதிகளை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது சிஆர்பிஎப்

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு 44 வீரர்கள் மரணம்

Post a Comment

0 Comments