சிங்கத்தை சீண்டியுள்ள பயங்கரவாதிகளை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது சிஆர்பிஎப்

ஜம்மு  காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த  வாகனத்தை ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 45 வீரர்கள் மரணித்துள்ளனர், மற்றும் பலர் காயம்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து  பயங்கரவாதிகளின் செயல்களை கண்டித்து பதிலடி கொடுக்க டில்லியில்  நடந்திய  ஆலோசனை கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் அவசரகால நிமித்தமாக    டெல்லி திரும்பினார். 

இந்திய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் பயங்கரவாதிகள் இதனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க படைகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த தாக்குதலை நடத்திவர்களுக்கு  தக்க தண்டனை  பெறுவதற்கான காலம் வெகுவிரைவில் உண்டு.


இந்தியாவைப் பற்றி யோசிப்பதையும் அதனை சீர்க்குலைக்க எந்த நாடுமுயன்றாலும் அந்த  நாட்டிற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராகும் எனபதனை பிரதமர்  பேசியது மூலம் தெரியவருகின்றது. 

குடும்பத்தை இழந்து தவிக்கும் வீரர்களுக்கு  ஆதரவு தெரிவிக்கும் சிஆர்பிஎப்  வீரர்கள், இந்த தாக்குதலுக்குரிய தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், இது நெஞ்சில் குத்திய முல் போல் உள்ளது என்றனர் சிஆர்பிஎப் வீரர்கள். 

சிங்கத்தை குகையில் தொட்டு சென்றுள்ளது பயங்கரவாதிகள் கூட்டம் பாதாளம் சென்றாலும் இனி பாவம் இல்லை என்பது போல் சிஆர்பிஎப் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

ஆட்டை கடித்து மாட்டை கடித்து அடிமடியில் கைவைத்ததுபோல் உள்ளது பயங்கரவாதிகளின் செயல் இதனை அடுத்து இந்திய அரசு  தக்க பதிலடி தருவதில் உறுதியாக உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை பதம் பார்த்து ஆயுதம் இல்லாமல் அடிக்கவுள்ளது. பாகிஸ்தானை தனிமைப் படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து, அடுத்து செக் வைத்து தகர்க்க இந்தியா திட்டமிட்டு செயல்படும்.

Post a Comment

0 Comments