ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு இல்லை!

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு வைக்க  மத்திய அரசு ஆலோசித்து பரிசீலினை செய்து வந்தது.  இந்தியா முழுவதும் மாணவர்களின் கல்வித் தரம் உயர இடைநிற்றல்  குறைய 5 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வு வைக்க அரசு பரிந்துரைத்தது. தமிழகத்தில் இவ்வாண்டு முதல்  பொத்தேர்வு வைக்க  அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு  எடுக்க வேண்டும். 

இந்நிலையில் 5 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு எந்த பொதுத் தேர்வு தமிழ்கத்தில்  இருக்காது என அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் திறன் வளர்ப்பு குறித்து மத்திய அரசு பரிசிலினை செய்து வந்தது ஆனால் இதுகுறித்த தமிழக அரசு சிந்திக்கவில்லை. 



ஏற்கனவே அரசு பள்ளிகளில் உள்ள குறைகளை தட்டிகேட்காமல் இருந்தனர். பொதுத் தேர்வு மூலம்  மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் மாணவர்கள் திறன் வளர்ப்பு அதிகரிக்கும். மாணவர்கள்  ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்விக்கு முக்கியத்துவம்  கொடுப்பார்கள்  அரசு பள்ளிகளின் தரம் உயர வழியாய் இருந்த வாய்ப்பை கோட்டை விட்டு இனி கல்விக்கு இந்த அரசு என்ன செய்யப் போகின்றது. 

எதற்கெடுத்தாலும் பயம், எதிர்ப்பு, போராட்டம்  குறித்து சிந்தித்தால்  மக்கள்
நலன் குறித்து சிந்திப்பது  எப்பொழுது. மக்களும் புத்தி கெட்டத் தனமாக பொதுத் தேர்வா என்று அஞ்சுகின்றனர்.  பத்து வயது பிள்ளைக்கு என்ன தேவையோ அதைத்தான்  பாடமாக வைத்துள்ளனர். அதனை தேர்வு மூலம் தான் வெளி கொணர முடியும். அந்த கால குருகுலப் பாடங்களில் இருந்த கடினத்தை ஒப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ஏன் தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகளை பாருங்கள் அவர்களை ஒப்பிட்டால் பொதுத்தேர்வு எல்லாம் பெரியது அல்ல,   நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் படும் பாட்டைபார்த்தும் நம் பிள்ளைகளின் திறன் வளர்க்கவில்லை எனில் வருங்காலத்தில் அரசு பிள்ளைகளின் கதி என்னவாகும்.  மதிபெண்கள்  முக்கியமல்லதான், ஆனால்  ஒட்டு மொத்த தேர்ச்சி வீதம் குறித்தாவது  அரசுக்கு  முடிவெடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
பத்து வயது முதல் படிக்கத் தொடங்கினால் பத்தாம் வகுப்பில்  நல்ல தெளிவும், பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்ணும் பெறலாம்.   

அன்று நாம் படித்த பாடங்கள் ஆசிரியர்கள், சூழல்கள் வேறு இன்று நாம் படிக்கும் ஆசிரியர்கள் சூழல்கள் வேறு,  பொதுத்தேர்வு அந்தந்த வயதுக்கும் அறிவுக்கும், ஏற்ற பாடங்களை கொண்டுதான் இருக்கும்.  அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் எத்தனைப் பேர்  வேலை செய்கின்றனர். எத்தனைப் ஏர் பெஞ்ச்சு தேய்கின்றனர் என்றாவது தெரியவரும். 

 என்று  வரும் நல்லகாலம் என்று ஆலோசித்து  ஆண்டுகள் கழிந்துவிட்டன.  அறிவான  ஆரம்ப பாடசாலைகள் எல்லாம் இன்று எவ்வாறு உள்ளன என்று சென்று பாருங்கள் புரியும்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியை  பரிசீலித்துப் பாருங்கள் அந்த மன உலைச்சல் நெருக்கடியைவிடவா பொதுத் தேர்வு கடினமாக இருக்கப் போகின்றது. கேட்பாரின்றி இருந்தால்  கேணியும் கடலாகும். கடலும்  குட்டையாகும்.

மேலும் படிக்க:

5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு!

வரட்டும் பொதுத் தேர்வு ஆசிரியர்கள் பெற்றோர்களின் பொறுப்புணர்வு வெளியே வரும் பிள்ளைகளின் திறன் மெருக்கூட்டப்படும்!

Post a Comment

0 Comments