ஐந்தாம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பொதுத்தேர்வு மத்திய அரசு ஏற்கனவே பரிசிலினையில் வைத்து இருந்தது.
5 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு வைத்தல் நல்லது. மாணவர்களின் திறன் மெருக்கூட்டும். ஒழுங்காக பணியை செய்யாத ஆசிரியர்கள் திருந்த வழியாய் அமையும்.
10 வயது முதல் படிப்பில் கவனம், சிந்திக்கும் திறன், செயலாற்றும் வேகம் எல்லாம் நன்றாக மெருக்கூட்ட பள்ளிகள் முனையும் இல்லையென்றால், கேட்க நாதி இன்றி கேள்வியின்றி குருட்டு மனப்பாடமாக திரியும்.
மன உலைச்சலா:
மன உலைச்சலா பத்து வயது பிள்ளை மொபைலில் கேம்கள் பல ,சுட்டி டிவி, செல்பி மோகம் போன்ற பல தலையீடுகளால் புத்தி தடுமாறி தவிப்பதைவிட பொதுத் தேர்வை எதிர்கொள்வது சிறப்பானதாகும்.
அதுஎன்னங்க மன உலைச்சல் ஓடுகின்ற பாம்பை மிதிக்கின்ற வயது 16 களில் என்றால் ஒன்னுமே தெரியாத வயதில் விதைப்பது ஏற்று வளரும் வயது 10 ஆகும். ஆகவே ஐந்தில் வளைத்தால்தான் ஐம்பதில் வளைக்க முடியும்.
பொறுப்புணர்ச்சி:
இதுவரைக்கும் என்பிள்ளையும் போகுது பள்ளி நாளும் எழுகின்றது துள்ளி என்ற பாடித் திரிந்தது போதும் பெற்றோர்களே, ஆசிரியர்களே பொதுத் தேர்வு வந்தால் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். பிள்ளைகளின் தேர்ச்சி விகிதம் வைத்து பிள்ளைகளின் திறனையும், பெற்றோர்களின் அக்கறையும் அத்துடன் ஆசிரியர்களின் பணிதிறனும் தனியே தெரியும்.
தோல்வி அவசியம்:
சிறுவயதில் இருந்து யாராக இருந்தாலும் சிறப்பாக செயல்படவில்லை எனில் பரிட்சையில் பெயில் ஆவார்கள் அதில் என்ன தவறு, சிறுவயதிலேயே சிறப்பாக படிக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பரிட்சையில் தேர்ச்சி அடைய முடியாது என்ற பயம் மற்றும் பொறுப்புணர்வு சிறுவயது முதல் இருக்க வேண்டும். அதற்காகவாது பொதுத் தேர்வு தேவை, மற்றும் எப்பொழுது பார்த்தாலும் வேலை என்று திரியும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளின் தேர்ச்சி வீதம் பற்றிய கூடுதல் கவனம் கொடுக்க வாய்ப்பாகும். தோல்வி குறித்து விழிப்புணர்வு பல்முளைகும் பொழுது இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பல் விழும் பொழுது எதற்கும் ஐ டோண்ட் கேர் என சொல்வார்கள்.
மேலும் பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு போல் இருக்காது இதுவரை என்ன எழுதினார்களோ படித்தார்களோ அதை இன்னும் கொஞ்சம் சீரியஸாக கவனமுடன் படிக்க வேண்டும். ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
கியூபா தெரியுமா!
இந்தியாவில் 10 வயது பிள்ளைக்கு பொதுத்தேர்வா என கொக்கரிக்கும் போலி ஊடகங்களுக்கும், பொறுப்பற்ற சமுதாய பொறுப்புகளுக்கும், அப்பாவி பெற்றோர்களுக்கும் கியூபா குறித்து சொல்கிறேன் கேளுகங்க,
கியூபாவில் பிள்ளைகள் காலை முதல் பள்ளிக்குச் செல்ல வேண்டும் மாலைப் படித்தவற்றை கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதுடன் தக்காளித் தோட்டத்தில் பணியாற்ற வேண்டும். இப்படித்தான் அந்த நாடு வளர்ந்தது.
நாம் குருகலத்தில் கற்றதைவிட இதுவொன்றும் கடினமல்ல, எல்லாம் எப்பொழுதும் யோசி என்ற சிந்தனையுடன் சிந்தித்து செயலாற்றுங்கள் உங்கள் பிள்ளைகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் படிக்க:
0 Comments