விளக்கின் தார்பரியம் விளக்கு ஏற்றும் முறைகள் அனைத்தும் முந்தய பதிவில் அறிந்தோம். விளக்கு ஏற்றும் வகைகள் மற்றும் ஒவ்வொரு திரி ஒவ்வொரு எண்ணெய்க்கும் கிடைக்கும் பலன்கள் பலவுள்ளன.
பொதுவாக வீடுகளில் சூரிய உதயத்திற்கு முன்பே விளக்கேற்றுவது நல்லது. மாலை 6 மணிக்கு விளக்கேற்றுவது சிறந்தது ஆகும்.தீபங்கள் ஏற்றும் போது அதன் திசை மற்றும் அதற்கேற்றவாறு பலன்கள் நிறைய உள்ளன. தீபம் பொதுவாக அனைத்து திசைகளிலும் எரியக்கூடியது தனித்திசை கிடையாது இருப்பினும் தீப முகம் பார்த்து ஏற்றுவது வழக்கிலுண்டு
கிழக்கு திசை தீப முகம் துன்பத்தை நீங்கச் செய்து மகிழ்ச்சியை பொங்கச் செய்யும் குடும்பம் அபிவிருத்தியாகும்.,
மேற்கு கடன் நீங்கும் தோசங்கள் நீங்கும்,
வடக்கு திசைகளில் திருமணத்தடை நீங்கும் ஏற்றுவது முன்னோர்களின் வழக்கமாகும். தெற்கில் ஏற்றுக்கூடாத திசை என்பார்கள்.
தீபத்தில் ஏக முகம் என்ற ஒரு முகம் வீட்டில் ஏற்றினால் நினைத்த செயல் கைக்கூடும் என்பார்கள்
இரண்டு முகம் கொண்ட தீபங்கள் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும்
மூன்று முகம் கொண்டு விளக்கு ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.
நான்கு முகம் கொண்டு விளக்கு ஏற்றினால் செல்வத்தை பெறுக்கும்.
ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றுபொழுது சகல நன்மையையும் உண்டாக்கும்.
தீபத்தில் பயன்படுத்தும் எண்ணெய்கள் ஒவ்வொன்றுக்கும்ஒரு சிறப்புகளுண்டு. அதனைப் பற்றி நாம் அறிந்து ஏற்றுதல் நலம் பயக்கும்.
நெய்யினால் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், நினைத்த காரியம் நடக்கும்.
நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் பெற்றுத்தந்து புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகின்றது.
தேங்காய் எண்ணெய் வசிகரிப்புத் தன்மையை உண்டாக்கும்.
இலுப்பை எண்ணெய் சகல காரியத்திலும் வெற்றியை பெற்றுத் தரும்.
விளக்கெண்ணெய் புகழ் உண்டாக்கும்.
வேப்பெண்ணெய் கனவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகச் செய்யும்.
ஐந்தும் சேர்த்து பஞ்சக் கூட்டு எண்ணெய் தெய்வ அருளையும் குலதெய்வ வழிபாட்டையும் உண்டாக்கும்.
இவ்வாறு விளக்கிற்கு பல்வேறு தத்துவங்கள் தார்பரியங்கள் உள்ளன. அதனை நாம் அறிந்து கொண்டு வழிபாட்டில் பயன்படுத்தி நல்ல பலன்கள் பெறலாம்.
மேலும் படிக்க:
0 Comments