ஐஏஎஸ் ஆகும் கனவா 2019 ஆண்டுக்கான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய அரசின் கீழ் இயங்கும் யூபிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19, 2019 முதல் பதிவு செய்ய தொடங்கலாம். யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 896 ஆகும்.
896 பணியிடங்களில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் அமையும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் பணியிடங்ககள் உள்ளடக்கி மொத்தம் 22 பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்தியா முழுவதும் தேர்வு மையங்களைக் கொண்ட யூபிஎஸ்சி முதன்நிலை தேர்வானது தாள் ஒன்று, தாள் இரண்டு என இரண்டும் கொண்டது. மெயின்ஸ் மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தாள் ஒன்றில் ஜென்ரல் ஸ்டடிஸ் என அழைக்கப்படும் பொது அறிவு பாடங்கள அறிவியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு, நடப்பு நிகழ்வுகள், வரலாறு, சுற்றுசூழலியல், இந்திய அரசியல் போன்ற பாடங்களை கொண்டது. 100 கேள்விகள் ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிபெண்கள் வீதம் 100 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் ஆப்டியூட் மற்றும் ரீசனிங் பகுதிகள் கொண்டிருக்கும் இரண்டாம் தாளினைப் பொருத்தவரை 33% கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருக்க வேண்டும்.
யூபிஎஸ்சியின் முதனிலைத் தேர்வினை ஐஎப்ஸ் எனப்படும் இந்திய வனத்துறை மற்றும் மற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட துறைகளுக்கு ஒன்றாகவே நடைபெறும்.
யூபிஎஸ்சியின் முதனிலை தேர்வில் வெற்றி பெறுவோர்கள் யூபிஎஸ்சியின் மெயின் தேர்வு எழுத தகுதிப் பெறுவோர்கள்.
முதனிலை தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 2, 2019 ஆகும். மற்றும் மெயின்ஸ் தேர்வானது செப்டம்பர் 20, 2019 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்.
21 வயது முதல் 38 வயது வரையுள்ளோர் வரை எழுதலாம். அந்தந்த பிரிவினருக்கு ஏற்ற சலுகையுண்டு
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 100 ஆண்கள் செலுத்த வேண்டும் பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டிணம் எதுவும் இல்லை.
மேலும் படிக்க:
0 Comments