பள்ளி கல்லூரி மாணவர்களை நெறிப்படுத்துதல் அவசியம் ஆகும்.

வன்முறை கலாச்சாரம் மாணவர்களிடையே பெருகி வருகின்றது.  சென்னயில் சமிபத்தில் பொதுசொத்தான பேரூந்தை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் செயல்கள் வெட்கி தலைகுனியச் செய்துள்ளது. 

படிக்கின்ற வயதில் மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் தகராறுகள் காரணமாக 27ஹெச் என்ற மாநகரப் பேரூந்தைப் காயப்படுத்திய சம்பவம்  கல்லுரி மாணவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது. 

மேலும் படிக்கும் வயதில் பட்டா கத்தி,பேரூந்தை தாக்கி சிறை செல்தல் எல்லாம் சாதனையல்ல உணர்ச்சிவசப் பட்டு செயல்படும் மாணவர்களின் செயல்களால் எதிர்கால வாழ்க்கையே கேள்வி குறியாக இருக்கின்றது. 

தேவையற்ற  வழக்குகள், சிறை மற்றும் படிப்புக்குசிக்கல் போன்றவற்றில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். பொது மக்களுக்கு கல்லூரி மாணவர்கள் என்றாலே  பயமும், ஏளனப் பார்வையுமே   கிடைக்கின்றது. 



வருங்கால இந்தியா வகுப்பறையில் ஆனால் வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் சிறையறையில் நிற்க்கும் அவலம், என்ன சொல்ல இந்த தலை முறையின் சிந்தனையற்ற போக்கு, ஆராயமல் செயல்படும் போக்கு ஆகியவை  நாளை தேசத்திற்கு அச்சம்  உருவாக்குகின்றது. 


புத்தகம் பிடித்து படிக்கும் வயதில்  ஆயுதங்களைப்  பிடித்து வாழ்வை அஸ்தமனம் செய்து கொள்கின்ற நிலையை  நினைக்கும் பொழுது மாணவர்களுக்கு  தேவையான கண்காணிப்பு குடும்பம், சமுதாயம் அது சார்ந்த ஊடகங்களால் வழங்கப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. 



இனிமேலாவது சமுதாயம், ஊடகம், குடும்பம்,  கல்லூரி போன்றவைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து மாணவர்களை பக்குவமாக கையாள வேண்டும்,. 

Post a Comment

0 Comments