தடம் புரளும் ஊடகத் தருமம்

ஊடகம் ஒரு தேசத்தின் அடையாளம்
ஊடகம் ஒரு நாட்டு மக்களின் மனசாட்சி
அணுவையும் பிளக்கும் ஆற்றல் கொண்டது ஊடகம்
ஒரு நாட்டு மக்களின்  ஆதார முகவரியை அண்டத்திற்கு அறிவிக்கும் ஆற்றல் கொண்டது ஊடகம்.

நாட்டின் மிகப்பெரிய சிந்தனை ஆற்றல் சக்தி கொண்டது ஊடகம் என்பது மிகப் பெரியது   இந்தியா போன்ற நாடுகளுக்கு  இது  பல நேர்மறையான மாற்றங்களை புகுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.


ஊடகம் இந்தியாவை பொருத்தவரை நான்காவது தூணாகும்.  ஊடகச் சக்தியால் நாட்டில் எழுச்சியையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.  ஊடகம் உருவான காலமுதல் நேற்று வரை நேர்மறையாகவே  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊடகம் பொழுதுபோக்கான அம்சமாக   கலைப்பை போக்கவும் அறிவை  வளர்க்கவும் கலை பண்பாடு  கலாச்சார சமுதாயத்தில் பல மாற்றங்களை புகுத்தி வந்தது. நாட்டில்  நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தில் இருந்துதான் நான் கற்று வந்தது பல, அன்று  நான பிரமித்த  அதே ஊடகம் இன்று என்னை எழுத வைக்கின்றது.

நேற்று வரை நான்  பிரமித்து பார்த்து  வளர்த்து வந்த  ஊடகத்தை  இன்று நான் குற்றவாளி கூண்டில் நிக்க வைத்து பேசவிருக்கின்றேன்.  நேற்று வரை உச்சாணி கொம்பில் நின்று வந்த ஊடகங்கள் இன்று தங்கள் நிலையை தாழ்த்தி செயல்படுவதை காணும் பொழுது சமுதாயத்தின் போக்கு இந்த தரிகெட்ட ஊடகங்களால் தான் தடமாறிப் போகின்றன என்ற கேள்வி துளையாய் துளைக்கின்றது.

 இன்றைய நாளில், ஒரு சில ஊடகங்களை தவிர  பெரும்பாலான ஊடகங்கள் வணிக போக்கில் செயல்பட்டு வருகின்றது.  ஆட்டை கடித்து மாட்டை கடித்து ஆளையே கடித்ததாம் என்ற கதையாக அங்கிங்கு என்று   பரவி தேசம் முழுவதும் ஊடங்களின் தொற்று வியாதியால் மக்களின் மனநிலையில் சகித்தன்மையற்ற போக்கும், சஞ்சலமான செயல்களும் பெருகி வருகின்றது. 
இணைய ஊடகங்கள் சில  டிஜிட்டல் செய்திகள் என்ற பெயரில் திரித்த செய்திகளைப் பரப்பி மக்களை மதியற்று செயல்பட வைக்கும் நிலையில் தள்ளுகின்றன. 

கலாச்சார கேடு: 
ஊடகங்கள் நேற்று வரை நெறிமுறையோடு செயல்பட்டு வந்தது. இன்று யார் கொடுத்த  கோல்  என்று தெரியவில்லை நெறிமுறையற்ற உறவுகளை ஊக்கப்படுத்தி சகிப்புத் தன்மையற்ற மனநிலையை உண்டு செய்கின்றது. 

கட்டுப்பாடுடனும் கலாச்சாரத்துடனும் கண்ணியத்துடன்  வாழ்ந்து வந்த ச முதாயம் இன்று 2 வயது பெண் குழந்தை, ஐந்து வயது பெண் குழந்தை முதல் 60 வயது பெண்கள் வரை  ஆபத்துக்குள்ளாக்கி, ஆபாச படங்களையும் அது குறித்த தவறான வழிமுறைகளையும் காட்டுகின்றது. இதனை காணும் ஆண்களும் பெண்களும் நெறியற்ற முறையில்   திரிகின்றனர். 

இந்தி எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் இங்கிலாந்து கலாச்சார துணிபுக்கு குஜா தூக்குவதேன். தேவையற்ற சமுதாய பரவல்களான கோபம், பொறாமை, வஞ்சம், பலிவாங்குதல்  கொண்ட தொடர்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் என்னும் பெயரில் இணையத்தில்  தடையில்லாமல் உலாவும் இந்த செய்திகளாள் தட்டுதடுமாறி இளைய சமுதாயம் எதுவும் தவறில்லை என்று எகிரி குதித்து  ஓடுகின்றது. 

வன்முறை காட்சிகளால்  தவறு செய்பவர்கள் மனம்  அச்சமற்று கோப ஆவேசத்தில் தவறு செய்கின்றனர். மேலும் சிறையில் செய்த குற்றங்களை பற்றி  தெரிவிக்கு பொழுது சினிமா  படத்தில் வந்த காட்சியை போல் அதனை எடுத்துரைக்கும் விதம்   ஊடகத்தின் மேல் இருந்த நம்பிக்கையை  கேள்விக் குறியாக்குகின்றது. 

ஒவ்வொரு இணைய செய்திகளுக்குப் பின்பும் ஒரு முறையற்ற ஆபாச செய்திகள் மற்றும் முறையற்ற  காட்சிகள் விளம்பரத்தில் உலா வருகின்றது. சில சமயம் தானாகவே செயல்படும் அந்த கிளிக்குகள் மக்களின் மனநிலையில் மாறுபாட்டை உண்டு செய்கின்றன. 

பெணணுக்கு கல்வி புகட்டிய சமுதாயம் பெண்ணை அறிவாய் பார்க்க மறுக்கின்றது. சதைபிண்டமாய் சருகாய் பெண்ணை காட்சிப் படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கும்  நிலைக்கு நாட்டை கொண்டு சேர்த்த பெருமை ஊடகத்திற்கே அதிகம் உண்டு. 

மாரல்கள் மறந்து போன குடும்பம்: 
ஒரு காலத்தில் அறிவின் களஞ்சியம்  மற்றும் நேரத்திற்கு மட்டும் பார்க்கப்பட்டு வந்த ஊடகம் இன்று ஓய்வற்று  ஓடும் நிலையில் இருக்கின்றது. சமுதாயத்தின் பெரும்  முதலாளிகள் அரசியல் வாதிகளின் கைப்பாவையாக ஊடகங்கள் செயல்பட்டு மக்களை மதியற்று செயல்பட்டு வர செய்கின்றது.  பெற்றோர்கள் பெரியோர்கள் என அனைவரும் ஆளுக்கொரு மூளையில் கைபேசியிலும், தொலைக்காட்சியிலும்  தங்களது பொன்னான நேரங்களை தொலைத்து உறவுகளின்  பெருமையை சிதைக்கின்றனர்.

சாதிச் சாயம்: 
ஒவ்வொரு சமுதாய சிக்கல்களிலும் சாதி மற்றும் மதசாயம் பூசி அமைதியற்ற நிலையில் சமுதாயம் இயங்கி வருவதற்கு காரணமாக இருக்கின்றன.  காமராசர், பாரதி வாழ்ந்த மண்ணில்  நாமும் வாழ்ந்து வருகின்றோம். கண்டவனெல்லாம் நம் மனதை ஆளும் அளவிற்கு நாம் தரம் தாழ்ந்து போகவில்லை என்பதை உணர்த்த வேண்டிய சமயம் இது போன்று இனி ஒரு தருணம் வர போவதில்லை.

மக்களுக்கு இயன்றதை மக்களிடம் அறம் போதிப்பதை பத்திரிக்கையில் புகுத்திய  வாழ்ந்த தலைவர்கள் வாழ்ந்த தேசம்  இது வந்தவனும் போகிறவனும் வாலாட்ட முடியாது இந்த தேசத்தில் இதனை மக்கள் உணர வேண்டும். தவறான படங்கள் வன்முறை செய்திகள், செய்தி திரிப்பு சந்தகம் வந்தால் செய்திகளைப் புரக்கணிக்கவோ அல்லது புகார் செய்யவோ மக்கள் தயங்க கூடாது.   அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்று கூறிய நம் பாரதி பிறந்த மண்ணில் வாழ்கின்றோம். அடிமாட்டு விலைக்கு பணிந்து போவதை விட்டு ஆராய்ந்து செயல்படுவோம்.

பார்க்கின்ற கேட்கின்ற செய்திகளை விட ஆராய்ந்து செயல்படுவோம். உண்மையை ஆதரிப்போம். தப்பு செய்தவதர்களை தட்டி கேட்போம் தடம் மாறும் தேசத்தை   காப்போம். தவறினை தட்டி  கேட்போம் உண்மைக்கு உரைக்கும்  ஊடகங்களுக்கு ஊக்கமளிபோம்.  மேற்கத்திய போக்கில் வாழ பணிப்போரினை புறக்கணித்து நல்ல நேர்மறையான வாழ்க்கையை வாழ்வோம்!  வாழ்க என் தேசம் வளர்க என் பொன்நாடு!.

மேலும் படிக்க:
சமூகம்

Post a Comment

0 Comments