ஆசிய விளையாட்டு போட்டியில் காலில் அடிப்பட்டும் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றார் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுவப்னா.
ஹெப்டத்லானில் முதல் தங்கம் வென்ற இந்தியா:
இந்தியாவில் முதன் முறையாக ஹெப்டத்லானில் தங்கம் வென்று பெருமிதக்கச் செய்த்துள்ளார். கடுமையாக காயம் மற்றும் பல்வலியால் அவதிப்பட்ட பொழுதும் சிறப்பான இடம் பெற்று முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஹெப்டத்லான் புள்ளி விவரங்கள்:
சுவப்னா உயரம் தாண்டுதலில் 1003 புள்ளிகள், ஈட்டி எறிதலில் 872 புள்ளிகள் மற்றும் குண்டு எரிதலில் 707 புள்ளிகள் நீளம் தாண்டுதலில் 865 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளார். 100 ஓட்டப் போட்டியில் 981 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பெற்றார். மேலும் 200 மீ ஓட்டப் போட்டியில் 790 புள்ளிகள் பெற்று, 800 மீட்டர் பிரிவினை நான்காவது இடத்தில் பெற்றார்.
வெற்றிக்குப் பின் சுவப்னா:
தேசிய விளையாட்டு தினத்தில் நான் வென்ற தங்கம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சிறப்பான தினமாக இருக்கும். பிறக்கும் பொழுதே 6 விரலுடன் பிறந்தவர் சுவப்னா ஆதலால் சாதரண காலணிகள் அணிவதில் சவாலனாதாக இருக்கும். இருப்பின்னும் தான் சாதாரண காலணிகளை அணிந்து விளையாடுவதாகவும் ஸ்பைக் போன்ற பிராண்டுகள் தனக்கு அசவுகரியமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தனது கால்களுக்கு ஏற்ப காலணிகள் தயாரித்து கொடுத்தால் விளையாட எளிதாக இருக்கும் என்றார்.
சுவப்னா 2014 ஆசிய விளையாட்டு போட்டி:
சுவப்னா 2014 ஆசிய விளையாட்டு போட்டியில் 5178 புள்ளிகளுடன் ஹெப்டத்லானில் சிறப்பாக செயல்பட்டு நான்காவது இடத்தை பிடித்து திரும்பினார்.
ஹெப்தலான் விளையாட்டு:
ஹெப்டத்லான விளையாட்டு ஏழு போட்டிகளை கொண்டு இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டுஎரிதல் 200 மீட்டர் போட்டிகள் நடைபெறும். இரண்டாம் நாள் நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், மற்றும் 800 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை கடந்து அதிக புள்ளிகளை பெற வேண்டும்.
ஏழு போட்டிகள் முடிவில் சுவப்னா மொத்தம் 6026 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். குயின்லிங் சீனா 5954 புள்ளிகளும் ஜப்பானின் யமாசகி 5873 புள்ளிகளும் பெற்றார்.
ஹெப்டத்லானில் இதற்கு முன் ஜொலித்த நட்சத்திரங்கள்:
இந்தியாவை சேர்ந்த சோமா பிஸ்வாஸ் வெள்ளி பதக்கம் 2002 இல் பெற்றார். ஜே.ஜே.ஷோபா வெண்கலம் 2006 இல் பெற்றார். பிரமிளா வெண்கலம் 2010 இல் வென்றுள்ளார்.
நான்காவது இடம் பெற்ற பூர்ணிமா:
சுவப்னா போன்றே சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்திய பூர்ணிமா 5973 புள்ளிகளுடன் சிறு வித்தியாசத்தில் கடுமையான சவால்களுக்குப பிறகு நான்காவது இடம்பெற்று பதக்க வாய்ப்பினை இழந்தது இருப்பினும் சிறப்பான முயற்சித்தார். அடுத்த முறை ஹெப்டத்லானில் அதிக பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.
0 Comments