ஏர்டெல், ஐடியா, வோடோபோன் வாடிக்கையாளர்களே இனிமே நோ ப்ரீ இன்கமிங் கால்!

வோடாபோன்,  ஏர்டெல், ஐடியா  நிறுவனங்கள் ஜியோவுக்கு ஆப்பு வைக்க, தனது வாடிக்கையாளருக்கு  இன்கமிங்  கால்கள் நவம்பர்    இரண்டாம் வாரம் முதல் 35 ரூபாய்ச் செலுத்தினால் மட்டுமே இன்கமிங் கால்கள் கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வாடிக்கையாளர் ரூபாய் 35 செலுத்தி ரிசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கமிங்  என   ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் அதிரடிக் கூட்டு அறிவிப்பினால் அநியாயமாக வாடிகையாளர்கள்  சுரண்டப்படுவார்கள். 

ஜியோ வருகையினால் மற்ற தனியார் மொபைல் கம்பெனிகள் மிகுந்த நஷ்டத்தில் விழுந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களிடம் ஜியோ என்னதான் உபயோகத்தில் முதன்மையாக இருந்தாலும் ஜியோ சிம்முக்குப் பின் பின்ப்பற்றி வந்த மற்ற செல்போன் அலைவரிசைக் கம்பெனிகளான ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற சிம்கள் நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டு வந்ததால்  அதனை வாடிகையாளர்கள் முக்கிய சிம்மாகக் கருதினாலும், முதன்மை இடம் ஜியோவின் கவர்ச்சி கரமான  பிளான்களினால் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 


வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்முக்கு முன் பயன்படுத்தி வந்த மற்ற சிம்களைக் கொண்டுதான் தங்கள் உறவினர்கள், பணியிடம், நண்பர்கள் எனத்  தொலை தொடர்பு செய்தனர். இதனை ஆயுதமாகக் கொண்டு ஏர்டெல், ஐடியா போன்ற கம்பெனிகளின் இந்த அதிரடி அறிவிப்பினைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வாரம் முதல் ஏர்டெல்,ஐடியா போன்ற நெட்வொர்களின் சேவையைத் தொடர்ந்து பெற அனைத்து வாடிக்கையாளர்களும் ரூபாய் 35 செலுத்தி 28 நாட்களுக்கு இன்கமிங் பெறலாம்.  இல்லையெனில் 15 நாட்களுக்கு வார்னிங் அதன்பின் 90 நாட்களில் சிம்கள் பயனற்றதாக்கப்படும் மேலும் அந்த நம்பர் கொண்ட சிம்கள் மற்றவர்களுக்கு விற்கப்படும்  என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்கள் அவலநிலை: 
போட்டி கொண்டு  தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இவ்வாறு அறிவித்துள்ளத்தை அடுத்து மற்ற நிறுவனங்கள் 35 ரூபாயும்  ஜியோ பிளானுக்குத் தகுந்தால்  போல் ஒரு  தொகையும் கொடுக்க வேண்டும் . இது  பகல் கொள்ளை இதனால் சாமானிய  மக்கள், வயதானவர்கள் அவலத்துக்குள்ளார்வர்கள். அவசர நிலைக்காலத்தில் மிகுந்த சிக்கல்  ஏற்படும் மேலும் சாமனியர்கள் மெருபான்மையாக 2 ஜி, 3ஜி சிம்கள் மட்டுமே  பயன்படுத்தி வருகின்றனர். 

பிஎஸ்என்எல்தான் ஒரே தேர்வு: 
இந்தத் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பல்டியை  தடுக்க ஒரே வழி பிஎஸ்என்எல் இதுதான் சிறந்த அரசின் தொலை தொடர்பு நிறுவனம் எப்பொழுதும் ஆபத்தவானவானவாக இருக்கும். வாடிக்கையாளர்கள் போர்ட் மூலம் தங்கள் எண்களைப் பிஎஸ்என்எல்லுக்கு மாற்றலாம்.  பிஎன்என்எல் டவர்கள் சிறப்பாகச் செயல்ப்பட்டு வருகின்றன. 

பிஎஸ்என்எல்லில் இன்கமிங் கால்கள் இலவசமாக வழங்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இறுதியில் அங்கு சுற்றி இங்கு சுற்றி அரசுதான் நம்மை காக்கின்றது.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments