காயங்களின் வகைகள் செய்ய வேண்டிய முதலுதவிகள்!

காயம்படுவோர்க்கு எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ள இந்த பதிவில் குறிப்புகளை கொடுத்துள்ளோம் அதனைப் பின்ப்பற்றுங்கள்

நெஞ்சில்  காயங்கள்: 
இக்காயங்கள் விலா எலும்புக்கு  ஊடாகவோ மேலாகவோ ஏற்படுபவையாகும். 

சிகிச்சை  வழங்கும் முறை:
ஒரு சுத்தமான துணியை மடித்து காய ஓட்டையை இறுக்கமாக மூடி அழுத்தவும். 
இந்த தடிப்பான சிறு மொத்தை அணியத்தை அகன்ற  கட்டுத் துணியால் அல்லது கழுத்துப்பட்டையைப் பாவித்து இறுக்குமாக கட்டிவிடவும்
 
விபத்துக்குள்ளானோரை நிமிர்ந்து இருக்கும் நிலையில் மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லவும், நிமிர்ந்திருக்கும் நிலையில் அவருடைய சுவாசம் இலகுவாக்கப்படும்.

வயிற்றில் ஏற்படும் காயங்கள்: 
வயிற்றில் ஏற்படும் காயங்கள் குடல் உறுப்புகள் வெளியே பிதுங்க முற்பட்டால் முதல் உதவியாளன் கிடைக்கும் சுத்தமான துணியை சுத்தமான நீரில் நனைத்துப் பிழியவும்.  

தயாரிக்கப்பட்ட சிறுமெத்தை அணியத்தை காயத்தின் மேல் அழுத்தி  வைத்துக் கட்டிவிடவும். அங்கே கிடைக்கும்  சால்வையையோ தலைபாகைத் துணியையோ காட்டாக பாவித்துக் கொள்ளலாம். 

மேலும் காயம்பட்டவரை மருத்துவ நிலையத்திற்லு கொண்டு செல்ல வேண்டும்,
 வயிற்றில் காயம்பட்டவருக்கு  உண்ணவோ குடிக்கவோ ஏதும் கொடுக்கலாகாது. 

உண்ணிகள்: 
 மனிதனினதும் விலங்குகளினதும் ஒட்டும் பூச்சிகளே உண்ணிகள் எனப்படும். 
உண்ணிக்கு மேல் எண்ணெய்/ மண்ணெண்ணெய்/  தேய்த்து ஊற  வைக்கவும். 
தோலில் இருந்து உண்ணிகள் கழரும் வரை பொறுத்திருக்கும்
ஒரே பிடியில் உண்ணியை இழுத்து எடுத்து விடவும்.  
ஆறுதலாக எண்ணெயையோ மண்ணெண்ணையோ தடவி உண்ணியை எடுக்க  முயல வேண்டும். 

சரியான சிகிச்சை கடைப்பிடிக்காவிடில் உண்ணிகள் தோலுக்கு கிழேயே தங்கிவிடும் இது தொற்றாகி உருவாகிவிடும்.  



கட்டுத்துணிகள் உடலின் ஒரு உறுப்பையோ அல்லது காயத்தையோ நன்றாக சுற்றி வைப்பதற்கு ஏதுவான பருத்தி துணியாகும்.
அணியங்களை கட்டப்பட்ட அந்த நிலையில் வைத்து கொள்ளவும்.
இரத்தம் பெருக்கம் ஏற்படும் போது அந்த இடத்தில் அழுத்தவும்.
மூட்டுக்காயங்கள் ஏற்படும்போது அதற்கு வேண்டிய ஆதாரத்தை கொடுக்கவும்.
தொற்று ஏற்படாதவாறு காயங்களை மூடி வைக்கவும்.
எலும்பு காயங்கள் ஏற்பட்டிருந்தால் அசைவை நிற்பாட்டவும்

கட்டுத்துணிகளின் வகைகள்:
கட்டுத்துணிகளை ஒரு மீட்டர் சதுரமான துணியை மூலைவிட்டமாக வெட்டி எடுக்கலாம். இது மடிக்கப்பட்டு நீள் கட்டுத்துணியாகவோ கத்தையாகவோ அணியங்களைப் பயன்படுத்தலாம்.

 ஒரு சுருள்கட்டுத்துணி சுத்தமான பருத்துத் துணியில் இருந்து செய்யப்படும் அதன் அகலம் காயம்ப்பட்ட உறுப்பின் பருமனைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். 

மீள் தப்மையுடைய கட்டுத்துணிகள் விரிந்து இழுக்க கூடியதாக இருக்கும் இவை சில தருணங்களில் மூட்டுக்களைத் தாங்குவதற்காக விளையாட்டு வீரர்களால் உபயோகிக்கப்படும். 

கட்டுத்துணியை விட  ஒட்டுப் பிளாத்திரி சிறப்பாக இருக்கும் அது மலிவானதும் சுலபமாக பாவிக்க கூடியதாகவும் உள்ளது. பருமன் அற்றதாகவும் இருக்கும் சில ஒட்டும் பிளாத்திரிகள் நீரை  உட்புகாமல் பாதுகாக்கும் தன்மை கொட்ண்டிருக்கும். 

களஞ்சியப்படுத்தல்:
கட்டுத்துணிகள் துப்புரவாக வைக்கப்படுதல் அவசியம் ஒவ்வொரு சுட்டு 
சுருளையும்   கவரில்,  பிளாஸ்ரிக்காலோ மூடி ஒரு சுத்தமான அலமாரியில் சேகரித்து வைக்கவும். 

ஒடுக்கமான மெல்லிய கட்டுத்துணிகள் இறுக்கமாக் கட்டப்படக்கூடாது. ஈராலிப்பான் காயங்களின் மேல் சுருள் கட்டுத்துணிகளைப் பாவிக்க  வேண்டாம். அவைகள் உலர்ந்தும் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். மேலும் இறுக்கமாக கட்டி விட்டால் வீக்கம், வலி, தோல் நிறம் மாறல் ஆகியன ஏற்படும். குருதி ஓட்டம் தடைப்படுவதையே குறிக்கின்றன.

மேலும் படிக்கவும்:

காயம்பட்டவருக்கான செய்ய வேண்டிய முதலுதவி குறிப்புகள்!

Post a Comment

0 Comments