பரோடா வங்கியில் புரோபெசனரி ஆபிசர் பணி வாய்ப்பு!

பரோடா வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
பரோடா வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர் புரோபெசனரி அலுவலர் பதவி ஆகும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 2ம் தேதி கடைசி தேதியாகும்.


பணியின் பெயர்
புரொபெஷனரி ஆபிசர்
பணியிடங்கள் மொத்தம்
600 பணியிடங்கள்
கல்வித் தகுதி
பத்தாம்  முடித்து வகுப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்
அறிவிக்கையின்படி பெறலாம் 
விண்ணப்பிக்க கடைசி தேதி
2-7-2018
வயது வரம்பு
20 முதல் 28 வயது வரை
பணியிடம்
மும்பை

தேர்வு முறை:
பரோடா வங்கியில் புரொபேஷ்னரி பணியிடத்திற்கு  ஆன்லைன் தேர்வு மற்றும் குரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்:
பரோடா வங்கியில் விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 600 பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி போன்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும்.  விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
பரோடா வங்கியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில், கேரியர் பகுதியில் கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து முழுமையாக படிக்கவும். விதிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

முக்கிய தேதிகள்:
பரோடா வங்கியில் விண்ணப்பிக்க தொடக்க நாள்: 12.6.2018.
பரோடா வங்கியில் விண்ணப்பிக்க இறுதி நாள்:2.07.2018

Post a Comment

0 Comments