பண டென்சனை குறைக்க எளியவழி !

" சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு ஏற்றார்போல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு நம் வாழ்வில் சிறிய அளவிலாவது சேமிக்க கற்று கொள்ள வேண்டும். நாம் சேமிக்கும் சிறிய தொகையானது நமது தேவைக்கு தற்காலத்தில் பயன் தரக்கூடியது. ஒருவர் வாழ்நாளில் குறைந்தது மூன்று விதங்களில் சேமிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


1) எதிர்காலத் தேவை (Future long term)
2) அவசர தேவை(Emergency)
3) அத்தியாவசிய தேவை( Future small term) 

தினக்கூலி ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 500 சம்பளம் வாங்குகிறார் எனில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் சேமிக்க வேண்டும். இப்படி நாள்தோறும் 100 ரூபாய் எனில் ஒரு மாதத்திற்கு மூவாயிரம்(3000) ரூபாய் சேமிக்க முடியும். அந்த மூவாயிரம் ரூபாய் மூன்று பிரிவுகளான எதிர்காலத் தேவை  அவசர தேவை, அத்தியவாசிய தேவை என மூன்று பகுதிகள் பிரித்து ஆயிரம் ரூபாய் வீதம் சேமிக்க வேண்டும.
1) எதிர்காலத் தேவை(Future benefits)
இது நீண்டகால சேமிப்புத் திட்டம். இதில் நாம் சேமிப்பது அதிக காலம் என்பதால் அதற்கு ஏற்றார் போல் குறைந்தது மூன்று வருட முதல் ஐந்து வருடங்கள் வரை சேமிக்க வேண்டும். இதற்குரிய இடங்கள் அஞ்சல் நிலையத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட்(Recurring deposit (R.D)) இதில் சேமிக்கலாம். RD நாம் ஒருமுறை வட்டி ஏதுமின்றி கடனாக அவசர தேவைக்கு எடுத்து பயன்படுத்த முடியும். இதில் ஐந்து வருடத்திற்கு 6.9 சதவீதம் வட்டியாக வழங்கப்படும். இதில் மாதம் 1000 எனில் ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும்.

 2) அவசர தேவை(Emergency Fund)
நமது சேமிப்பில் அவசர தேவைக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வங்கியில் சேமிப்பு கணக்கில் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பானது நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு வழங்கப்படும் வட்டியானது சிறிய அளவிலேயே கிடைக்கும். இதன் மூலம் நமக்கு என்ன பயன் என்றால் நமது தேவைக்கு வங்கியில் கடன் பெற்றுக் கொள்ள இது துணை புரியும்.

 3) அத்தியாவசிய தேவை(Future Small Term)
இதில் சிறிய காலங்கள் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் RD போன்ற வங்கியில் சேமிக்க வேண்டும். இது நம் பிள்ளைகளின் பள்ளி கட்டணம் போன்ற செலவுகளுக்கு இது பயன் தரும். இதில் வட்டி விகிதமானது வங்கிக்கு வங்கி வேறுபடும். ரிசர்வ் வங்கியின் வட்டி கொள்கைக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். இந்த அத்தியாவசிய தேவை என்பது முன்கூட்டியே நமக்கு தெரிந்த பெரிய செலவினங்கள் ஆகும். பெரிய செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு மாதம் மாதம் சிறிய தொகையை எடுத்து வைத்துவிட்டாள் பெரிய செலவினங்கள் ஒரு பொருட்டாக தெரியாது.

 இதன் மூலம் நாம் யாரிடமும் உதவியை எதிர்பார்த்து நிற்க தேவையில்லை. இதனால் நாம் தேவையற்ற டென்ஷன்களை குறைக்க முடியும். சாமானிய மக்களால் செலவினங்களை பிரித்து சிறிய அளவில் சேமிக்க கற்று கொண்டாள் தேவையற்ற கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். இதன்மூலம் உறவுகளிடம் ஏற்படும் மனக் கசப்புகளை நீக்கலாம். படிப்பது மட்டுமின்றி உங்கள் வாழ்விலும் இதை கடைபிடியுங்கள்.

Written by Toll Free. NA

Post a Comment

1 Comments