நவீன காலத்தில் பெண்கள் தங்களின் கேசம் பராமரிக்க பல்வேறு பொருட்கள் மார்கெட்டில் உலா வருகின்றன. நாமும் இதை மாற்றி அதை மாற்றி என மாதம் ஒன்று என விளம்பர யுக்திக்கேற்ப நம்மை நாம் பல்வேறு கோணங்களில் மாற்றி செயல்படுகின்றோம்.
நீங்கள் தொடர்ந்து தலைக்கு பல்வேறு பிராண்டுகளை பயன்படுத்தி வருகின்றீர்களா ஆனாலும் முடிவளர்ச்சி அடையவில்லை மற்றும் கேச வறட்சி மேலும் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதல் போன்ற சிக்கலில் இருந்து கேசத்தை காக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு பொருட்களை வாங்குவீர்கள் ஆனால் பல பொருட்களில் கெமிக்கல்கள் மற்றும் சைடு எஃபகட் அதிகமாக இருக்கும் அதனால் மிகுந்த சோர்வும் அடைவீர்கள் இதற்கு என்னதான் தீர்வு என பல கூகுள் செய்து பார்த்து நிவாரணி அறிந்திருப்பீர்கள். பலருக்கு அதற்கான நேரமும் விழிப்புணர்வும் இருப்பதில்லை.
சந்தையில் விதவிதமாக காஸ்மெடிக்ஸ்க்கு செலவழிப்பதுபோல் நாம் வேறு எதற்கு செலவழிப்பது இல்லை ஆனால் அதனால் பக்கவிளைவுகள் வருமே தவிர வேறு பயன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
வீட்டிலேயே உங்களுக்கான சீயகாய் ஷாம்பூ தயாரிக்கும் முறையை கற்றுக்கொள்ளுங்கள் அதனை சிலேட் குச்சி இந்தியா விளக்குகின்றது. வீட்டிலேயே தயாரிக்கும் ஷாம்பூவானது மிகுந்த ஆரோக்யம் மிகுந்தது மற்றும் எளிய வடிவில் செய்து முடிக்கலாம்.
வீட்டிலேயே தயாரிக்கும் சீயக்காய சாம்பூவை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி வளர்ச்சி மற்றும் இளநரைக்கு தீர்வு, சொட்டை விழுதலிருந்து கேசத்தை காத்து கொள்ளலாம். மேலும் பட்டுப்போன்ற வளவளப்பான கூந்தல் கிடைக்கப் பெறலாம்.
வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பூ செய்ய தேவையான பொருட்கள்:
சீயக்காய்
காய்ந்த நெல்லிக்காய்
மேலே குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் எளிதில் நாட்டு மருந்து கடைகளில் பெறலாம். மூன்றும் 25 கிராம்கள் என தனித்தனியாக வாங்கலாம். மொத்தம் 75 கிராம் மூன்றும் வாங்கி அவற்றினை வைத்து எவ்வாறு ஒரு லிட்டர் ஷாம்பு வீட்டில் செய்வதென அறிந்து கொள்வோம்.
தயாரிக்கும் முறை:
மேலே குறிப்பிட்ட சீயக்காய் மற்றும் காய்ந்த நெல்லிக்காய் அத்துடன் பூங்கக்காய் போன்றவற்றை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை எளிதாக 10 மணிநேரம் வரை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊறவைக்க வேண்டும். அக்கலவையை குக்கரிலிட்டு 5 விசில் வருவரை விட்டு எடுக்கவும். அதன்பின் அந்தகலவையை நன்கு கடைந்து மசிக்க வேண்டும் அப்பொழுது பூங்கக்காய் கொட்டையினை தனியாக எடுத்துவிடலாம். அவற்றினை பயன்படுத்த தேவையில்லை மேலும மசித்த கலவையை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வீட்டில் ஸ்டோர் செய்யலாம் பிரிஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கலவையை ஒரு மாதம்வரை பயன்படுத்தலாம் இது அதிக நுரையை தராது ஆனால் தலையில் உள்ள முடிவளர்ச்சியை தடுக்கும் பொடுகு, முடிவெட்டு, கரப்பான் மற்றும் பேண் போன்றவற்றை போக்குவத்துடன் முடி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கின்றது.
காய்ந்த நெல்லியில் வைட்டமின் சி இருப்பதால் தலைமுடி வளர்ச்சியினை தூண்டும். சீயக்காய் மாசு மற்றும் அழுக்கை போக்க உதவும் சோப்நட்ஸ் என அழைக்கப்படும் பூங்க்காயானது நுரைவளம் கொடுக்கும் மேலும் அது இயற்க்கை கிருமி நாசினியாக இருந்து கேசத்தை காக்கின்றது.
சோப்நட்டினை வெளிநாட்டினர் மிகுந்த அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சீயக்காய் ஷாம்பூவை தலைக்கு எண்ணெய் வைத்து ஊரியபின் நார்மல் அளவிலிருந்து கொஞ்சம் அதிகமாக எடுத்து இரண்டு முறை தலையில் நன்கு தேய்த்து குளித்தால் தலையிலுள்ள எண்ணெய் பிசுக்குகளை எளிதில் போக்கலாம்.
மேலும் படிக்க:
காய்ந்த நெல்லியில் வைட்டமின் சி இருப்பதால் தலைமுடி வளர்ச்சியினை தூண்டும். சீயக்காய் மாசு மற்றும் அழுக்கை போக்க உதவும் சோப்நட்ஸ் என அழைக்கப்படும் பூங்க்காயானது நுரைவளம் கொடுக்கும் மேலும் அது இயற்க்கை கிருமி நாசினியாக இருந்து கேசத்தை காக்கின்றது.
சோப்நட்டினை வெளிநாட்டினர் மிகுந்த அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சீயக்காய் ஷாம்பூவை தலைக்கு எண்ணெய் வைத்து ஊரியபின் நார்மல் அளவிலிருந்து கொஞ்சம் அதிகமாக எடுத்து இரண்டு முறை தலையில் நன்கு தேய்த்து குளித்தால் தலையிலுள்ள எண்ணெய் பிசுக்குகளை எளிதில் போக்கலாம்.
மேலும் படிக்க:
0 Comments