கற்றாழை ஜெல்லின் ஹேர் மாஸ்க் மற்றும் ஆலோவீரா மஞ்சள் குளியல்!

ஆலோவீரா  வீட்டில் வைத்து தலைக்கு ஊட்டமளிப்பது எவ்வாறு என அறிந்து கொள்வோம். ஆலோவீராவைப்  பற்றி இதுவரை பலமுறை பல வித குறிப்புகளை சிலேட்குச்சி தகவல்களாக கொடுத்துள்ளது.


ஆலோவீரா  உலகமுழுவதுமுள்ள மக்களால் அழகு சாதனப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை பயன்படுத்தி  தலை, சருமம் மற்றும் சிறந்த மருத்துவ பொருளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் வயக்காட்டில் போகும்   காடுகளில் ஆங்காங்கே முளைத்து கிடக்கும் இந்த அருமருந்து  இந்த நவீன காலத்தில்  தேவையாக கருதப்படுகின்றது. முன்னோர்களால் சிறந்த பிணி மற்றும் அழகு சாதனப் பொருளாக ஆலோவீரா பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆலோவீரா ஜெல்லில் இயற்கையான  சத்துக்கள் அடங்கியுள்ளது என்பதால் அதனை பயன்படுத்தும் பொழுது இயற்கையான கிளென்சிங், சில்கி மற்றும் உறுதிதன்மை ஆகியவற்றினை  எளிதாக பெறலாம்.  ஆலோவீரா ஜெல்லினை தலையில் தேய்த்து 20 நிமிடம் தலையில் ஊறவைத்து அதனை  நன்கு மசாஜ் செய்து குளித்தால் போதுமானது ஆகும்.

பெண்கள் தங்களை இயற்க்கையாக பராமரிக்கும் பெண்கள் எனில்  தினமும் நீங்கள் எந்த கிரிமும் அப்ளை செய்வதற்கு பதிலாக இந்த ஜெல்லினை  உடல் முகம் மற்றும் தலையில் தடவி  அறை மணி நேரம் கழித்து குளிக்கவும் இந்த ஒன்றே போதுமானது ஆகும். இதனுட் கஸ்தூரி மஞ்சள் தூள் இணைத்து  பயன்படுத்தினால் இன்னும் நிறைய பயன்கள் பெறலாம். 

ஆலோவீராஜெல்லுடன் இணைந்த மஞ்சள் குளியல்

கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஆலோவீராஜெல்லுடன் இணைந்து பேஸ்பேக் போடும் போது ஸ்கின் டேன் என்பதனை நீக்கலாம் எண்ணெய் பசை நீக்கப்படும் முகம் பட்டுப்போன்று பளப்பளப்பாகும். 

கற்றாழையில் கொஞ்சம் மஞ்சள் பிஞ்ச் அளவில் எடுத்து நன்கு கலந்து உதடுகளில் போடும் போது உதடுகளிலுள்ள கருப்பான  இறந்த செல்களை  எளிதில் நீக்கிவிடலாம் இவற்றில் சிலர் பிஞ்ச் பொடி உப்பும் கலந்து தடவினால் இன்னும்  நலம்  பயக்கும் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஜென்டிலாக உதட்டில் தடவ வேண்டும். 

குளிக்கும் பொழுது கற்றாழையின் ஜெல்லுடன் கஸ்தூரி மஞ்சள் கலவையினை  கலந்து பூசும் பொழுது   உடலிலுள்ள இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன.  தேவையற்ற மாசுக்கள்  மற்றும் தோளில் மூடியுள்ள துவாரங்கள் திறக்கப்பட்டு தேவையற்ற  ஆயில்கள் நீக்கப்பட்டும்  இயற்கையான நேச்சுரல் மாசய்ஸ்ரைசிங்கினை அது அதிகப்படுத்துகின்றது.

மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல்லானது தோளிலுள்ள வியர்வைதுவாரங்களை  செப்பனிட்டு மேலும் டீப் கிளிங்கை கொடுக்கின்றது.மேலும் மஞ்சள் கற்றாழை ஜெல்லின் கலவையுடன் இணைந்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலக்கும் பொழுது    உடலில் ஏற்ப்பட்டுள்ள காயங்களை உடனடியாக குணப்படுத்தலாம் மேலும் குளியலில் இவை மூன்றும் கலந்தால் சிறந்த ஒரு இயற்கை குளியல் அனுபவம் கிடைக்கும். 

பாதங்களில் இறந்த செல்களை நீக்கவும் பாதங்களிய பட்டுப்போல் பளப்பளப்பாக காகவும்  மேற்குறிப்பிட்ட கலவையினை கலந்து பாதங்களில் பூசி 10 நிமிடம் களித்து குளிக்க செல்லும் போது நன்கு ஸ்கிரப் செய்து  சேர்த்தால்  பாதங்களில் மிருதுதன்மையை காத்துக் கொள்ளப்பட்டு அவற்றினை  இயற்கையாக பாதுகாக்கலாம். 

மேலும் படிக்க:

எண்ணெய் குளியலை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுவது எப்படி என அறிவோம்!

கற்றாழையின் அழகு குறிப்புகள் படிக்க

Post a Comment

0 Comments