எண்ணெய் குளியலை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுவது எப்படி என அறிவோம்!

சிம்பிள் ஆயில் பாத்  வாரம் இருமுறை எடுத்துக்கொணால் மனமும் உடலும் பிரஸ்ஸாக இருக்கும். அந்த காலம் முதல் இந்த காலம் வரை முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது இப்பவும் பயன்படுத்தப்படு வருகின்றது. இந்த சிம்பிள் ஆயில் பாத்கள் எடுத்து  குளிக்கும் பொழுது கேசம் மிகுந்த ஆரோக்கியமாகவும் சில்கி சைனியாகவும் இருப்பதை உணரலாம். இந்த எண்ணெய் கலவையினை மிகுந்த பக்குவமாக செய்ய வேண்டும்.


தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் கடவுளின் இருப்பிடம் எனப்படும் கேரளாவில் அதிகம் பெண்கள் இதனை பயன்படுத்துவார்கள் உணவுக்கும் பயன்படுத்துவார்கள் அதனை  எண்ணெய்களின் கடவுள் என அழைக்கவும் செய்வார்கள் இந்த தேங்காய் எண்ணெயினை உணவிலும் பயன்படுத்துவார்கள் அதனால் தான் கேரளா பெண்கள்  கேசம் பட்டுபோன்று மிளருகின்றது மேலும் அவர்களுக்கு இயற்கையிலே சருமத்தில் பட்டுபோன்ற பொலிவு  கிடைக்கின்றது. அதுவும் செக்கில் அரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் எனில் இன்னும் சிறப்பாக இருக்கும். செக்கில் அரைக்கப்பட்ட எண்ணெயில் அதன் சத்துக்கள் ஹைட்ரேட் ஆகாமல் இருக்கும். அதாவது மில்லில் அரைக்கப்படும் எண்ணெய்கள் சூடாகமல்  அதன் தன்மை மாறாமல் சத்துக்கள் அப்படியே கிடைக்கும் இந்த முறைகள் நம்முன்னோர்களால் பயன்படுத்தப் பட்டு வந்தது. பின்பு நவநாகரிகம் வேளைப்பளு என்று ஆயில் மிள்கள் கொண்டு வரப்பட்டு செய்யப்பட்டது. ஆனால் அவற்றில் எண்ணெய்கள் சூடாகும் பொழுது எண்ணெயின் தன்மை மற்றும் ஊட்டச் சத்துக்கள் அவற்றால் முழுமையாக கிடைப்பதில்லை என்பதால் இன்று மீண்டும் #செக்கு எண்ணெய் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மார்கெட்டில் செக்கில் அரைக்கப்பட்ட எண்ணெய்கள் விற்பனைகளும் சூடுபிடித்துள்ளது. இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெணெய் மற்றும் ஆமணக்கு எனப்படும் விளகெண்ணெய் இவை மூன்றும் கலந்த கலவையை வைத்து ஆயில் குளியல் செய்ய தேவைப்படும் பொருட்கள் ஆகும். 

எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய்:
எள் எண்ணெய் உடலில் குளிர்ச்சியை சீராக்கி சூட்டினை போக்கும் அத்துடன் உடலுக்கு வலிமை கொடுக்கும். இவ்வெண்ணெயை உடல் மற்றும் கண்காது தலையில் தேய்து நன்கு குளித்தால் கண் காது சிக்கல்கள் சரியாகும். சூட்டு சிக்கல் சரியாகும். நல்லெண்ணெயை சருமத்தில் தடவும் போது பருக்களில் குறையும் மற்றும் வலி தீரும்,  மேலும் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய் குழந்தைகளாக இருக்கும் பொழுது நமக்கு பாட்டி தேய்த்து விடுவது வழக்கமாகும். மேலும் இந்த எண்ணெய்க தேய்து குளிக்கும் பழக்கத்தால் உடலில் ஏற்படும் நோய்களின் தாக்குதல் குறையும் மேலும் தலைமுடி கருகருவென இருக்கும் இளநரை மற்றும் முடி உதிர்தல் சொட்டை  விழுதளிலிருந்து பகுதிகள் காக்கப்படும். குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களில் இருந்து உடலை காக்கவல்ல ஆதாரம் ஆக எண்ணெய்கள் திகழ்கின்றன.

மேலே குறிப்பிட்ட தேங்காய் எண்ணெய் அத்துடன் நல்லெணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் மூன்றையும்  தேவையான அளவுக்கு சமமாக கலந்து அதனை சூடான நீரில் பாத்திரத்துடன் வைக்க எண்ணெய் வெதுவெதுப்பு அடையும் மேலும் இவற்றை தலைமுதல் பாதம் வரை தேய்த்து ஊர வைக்க வேண்டும்.  இதன் குணநலன்கள் தலைமுடி  மற்றும் சரும சிக்கல் சரும் தொற்று போன்றவற்றில் இருந்து நம்மை காத்து ஆரோக்கிமாக  வைக்கின்றன.

நம்முன்னோர்கள் பயன்படுத்திய இந்த மூன்று எண்ணெய்களையும் செக்கில் அரைத்தாக பார்த்து வாங்குகள் அதனை ஒன்று கலந்து மேலே கூறியப்படி சூடான நீரில் பாத்திர கலவையில் வைக்கும் பொழுது ஆயில்களின் கலவை தேவையான அளவில் வெதுவெதுப்படைந்து நமக்கு உதவிகரமாக இருக்கின்றது.  நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உடல் வலிமையுடன் இருக்க ஆயில் பாத் உதவிகரமாக இருக்கின்றது. அதுவும் கணினி யுகத்தில் தினமும் கணினியின் முன் வேலை செய்வோர் வாரத்தில் இருமுறை தலையில் மேற்கூறிய ஆயில்களின் கலவையை சேர்த்து குளித்து உடல் ஆரோக்கியம் பேணுங்கள் இதனால் புத்தி மற்றும் தேவையற்ற மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம்.

 மேலும் படிக்க:

கிளியர் ஸ்கின்னுக்க வெற்றிலை மஞ்சள் கலந்த பேசியல் 

அழகு குறிப்புகள்

Post a Comment

1 Comments