கிளியர் ஸ்கின்னுக்க வெற்றிலை மஞ்சள் கலந்த பேசியல்

பெண்களுக்கு நாள் பட்ட முகத்தில் தழும்பு மற்றும்  பருக்கள்  அத்துடன் முகத்தில் ஏற்படும்  பிளவுகள் ஆகியவற்றை சரிசெய்ய  வெற்றிலை போதுமானது ஆகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி முகத்தில் உள்ள சில  தழும்புகள் ஆங்காங்கே  திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற  தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள். அவர்களுக்காகவே  கொழுந்து வெற்றிலை கொண்டு எவ்வாறு பேசியல்  செய்யலாம் என பார்ப்போம்.

வெற்றிலை மற்றும்   அரிசி மாவு அத்துடன்  முல்தானி மட்டி 2 இஞ்ச்  அல்லது ரோஸ்வாட்டர்  ஆகிய பொருட்கள் இந்த பேசியல் செய்ய முக்கியமான பொருட்கள் ஆகும். மஞ்சள் மற்றும் எலுமிச்சை இலை பொடி  போன்றவற்றை நாம் பேசியலுக்கு பயனபடுத்தும் பொழுது கூடுதலான பாதுகாப்பு ஆரோக்கியமும் அதிகரிக்கலாம்.  வெற்றிலையினை பேசியலுக்கு இரண்டு வழியில் பயன்படுத்தலாம் முற்றிய இலை மற்றும் இளம்  இலைகளாக பிரித்து பயன்படுத்தலாம்

வெற்றிலை மற்றும் முல்தானி மட்டி 2 இஞ்ச் மண்ணுடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு அரைத்து எடுத்து கொண்டு அந்த கலவையுடன் அரிசி மாவினையும், மஞ்ளையும்  கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி அது காயும் வரை காத்திருக்க வேண்டும். இந்த கலவை பூசும் பொழுது முகத்தில் அரிப்பு மற்றும் ஒரு வித குருகுருப்பு ஏற்படும்.  அவற்றின் மூலம் முகத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நீக்கப்படும் அதனால் பேசியல் கலவை நன்கு காயும் வரை காத்திருந்து பின் முற்றிய வெற்றிலையினை  சிறிய தண்ணீருடன் கொதிக்க வைத்து அது ஆறியபின் அந்த கலவையில் டவல் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம்.  அல்லது ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தினை துடைத்து எடுக்கவும்.

வெற்றிலை பேசியலை பயன்படுத்திய பின் முகத்தில் சருமம் பட்டு போன்று மிருதுவாக இருப்பதையும் மூக்கு கழுத்து பகுதியில் கருமை மறைவதையும்  காண முடியும். மேலும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அடியோடு நீக்கும் வெற்றிலை பேசியலை நன்கு பயன்படுத்துங்கள். 


வெற்றிலையினை உணவுக்குப்பின் பின் பயன்படுத்தி வந்தோம் அவற்றின்  சாற்றினை கொண்டு மருத்துவ தேவைக்கு பயன்படுத்திய முன்னோர்கள் வெற்றிலையினை கொண்டு அழகு பராமரிப்பும் செய்துள்ளனர் . வெற்றியிலையில் பலரகங்கள் உள்ளன.  அவற்றில் பேசியலுக்கு பயன்படுத்தும் வெற்றிலையில் கம்மார்  வெற்றிலை மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும்.  மற்ற ரகங்களைவிட இந்த  ரகம் சிறப்பான வேகமாக  செயல்படும்.

வெற்றிலை சருமத்தை தூய்மையாக வைக்கவும் தேவையற்ற மாசினை நீக்கி சருமத்தின் இயல்பு தன்மையை நிலைக்கச் செய்து நிற மங்கிலிருந்து சருமத்தை காக்கின்றது. 

அரிசி மாவு தேவையற்ற ஆயிலை நீக்கி சருமத்தின் நீர்மை தன்மையை நிலைக்கச் செய்யும்.கஸ்தூரி  மஞ்சள்  ஆயுர்வேத நிவாரணி அலகுகலையின் ராணி எனலாம். ஆயிரம் காலத்து ஆறுதல்   தன்மையுடன் பயணித்து வரும் மஞ்சளின் மகிமையை கொண்டு மகளிரும் சிறப்படைக்கின்றனர். 

Post a Comment

0 Comments