நாளை ஆகஸ்ட் 05 2019 நாக பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகின்றது. நாக பஞ்சமி விரத முறைகளை கடைப்பிடித்தல் சிறப்பானதாகும்.
அண்ணன், தம்பிகள் நலம் கருதி பார்வதி தாயவள் இவ்விரதம் குறித்து தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இதனை தம்பதிகள் பக்தியுடன் வணங்குவதுண்டு.
மேலும் படிக்க:
அண்ணன், தம்பிகள் நலம் கருதி பார்வதி தாயவள் இவ்விரதம் குறித்து தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி
விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம்,
வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட
பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு
வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு
பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும்
கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.
சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை
செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் வணங்கி புனிதமாக அணிவது சிறப்பானதாகும். இத்தினத்தன்று ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி,
கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன்
ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப்
பூஜிப்பது நல்லது என்பது ஐதிகம் ஆகும்.
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இதனை தம்பதிகள் பக்தியுடன் வணங்குவதுண்டு.
இவ்விரதத்தின் பொழுது அவரவர் சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம்
செய்து அதை ஒரு கலசக்குள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
நாக பஞ்சமி வாரத்திலே அண்ணன் தமிபிகளுக்காக கொண்டாடும் ரக்சா பந்தனும் வருவது சிறப்பானதாகும்.
மேலும் படிக்க:
0 Comments