ஜியோ, ஏர்டெல்லை மிஞ்சும் வோடாபோன் சலுகைகள், அடுத்த என்ன!..

ஜியோவின் பல்வேறு சலுகைகளை கொண்டு வந்து வாடிக்கையாளரை தன் பக்கம் ஈர்த்து மற்ற நெட்வொர்க்குகளை ஸ்தம்பிக்க வைத்தது. எங்கு பார்த்தாலும் ஜியோவின்  ஆதிக்கம் கொடிக்கட்டி பறந்தது.  ஏர்டெல், டொக்கோமோ, வோடபோன், பிஎஸ்என்எல், போன்ற வாடிக்கையாளர்கள்  அனைவரும்  ப்ரீயாக  கிடைக்கும் ஜியோ பக்கம் தாவினார்கள். 

பட்ஜெட்டில் அடங்கும் என  வாடிக்கையாளர்களும் ஜியோவை மெயினாக்கி மற்ற நெட்வொர்க்கினை டம்மியாகப் பயன்படுத்தி வந்தனர். 
டாப்பில் நின்ற ஜியோவுக்கு ஆப்பு வைக்க ஏர்டெல், வோடபோன், போன்ற நிறுவனங்களும்  சலுகைகளை ஜியோவுக்கு இணையாக கொடுத்து வந்தனர். 
ரூபாய் 149க்கு ரீசார்ஜ் செய்தால் மாதம் முழுவதும்  ப்ரீ கால் மற்றும் தினம் 1 ஜிபி, ப்ரீ மெசசேஜ் போன்றவை 28 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. 



ஏர்டெல்லில்  ரூபாய் 169 க்கு ரீசார்ச் செய்தால் அவ்வாறே 28 நாட்களில் தினம் ஒரு ஜிபி நெட், ப்ரீ கால், ப்ரீ மெசேஜ் கொடுக்கப்பட்டது.  வோடபோனும்  தன் பங்குக்கு சலுகைகளை அறிவித்து தனது வாடிக்கையாளரை தக்க வைத்தது. 

வோடா போனின் சலுகைகள்:
வோடபோனில் ரூ.255 பிரீபெயிட் சலுகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படவுள்ளது.  வோடாபோனில் இதே பிளானில் 2 ஜிபி ப்ரீ டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதோடு வோடபோன் பிளே சந்தாவும் வழங்கப்படுகிறது. ஆனால் ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க்கில்   நடப்பில் உள்ள பிளான்கள் நடுத்தரமாக உள்ளது. போட்டிகள் ஏதும் இல்லாததால், அடுத்த வோடாபோன் ஒரு ரவுண்டு வாடிக்கையாளர்களிடையே வலம் வருமா, அல்லது ஜியோ, ஏர்டெல் வேறு ஏதாவது  புதிய அறிவிப்புகள் கொடுக்குமா என எதிர்ப்பார்புகளுடன்  வாடிக்கையாளர்கள் காத்துள்ளனர்.

ஜியோவின் ரூ.299 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா  போன்ற சலுகைகள் நட்ப்பில் உள்ளன.

Post a Comment

0 Comments