கண்டிஷ்னர் பயன்படுத்துபவரா நீங்கள்!.. கவனமாக இருங்கள்!

பெண்கள் தங்களது முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான சரியான வழிகளை பின்பற்றினால் அவர்களின் கூந்தல் சிக்கென்று வளரும். கூந்தல் பராமரிப்பில் சாம்பூ, கண்டீசனர்,  சீரம்,  எண்ணெய் ஆகியவை அடிப்படையாக இன்றைய கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு முறை தலை அலசிய பின்பு கண்டிஷ்னர் செய்வதை  பெரும்பாலான பெண்கள் பின்ப்பற்றி வருகின்றனர். கண்டிஷ்னர் உங்கள் முடியை பாதுகாக்கிறது. 
 

 
கண்டிஷ்னர் பெண்களின் தலை முடியை பாதுகாக்கிறது. கண்டிஷ்னரானது   தலை முடியின் மேல் ஒரு படலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. மேலும், முடிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது. மேலும் இது முடியினை பளபளக்க செய்யவே கண்டிஷ்னர் பயன்படுத்திகின்றனர். 
 
 
 
 
ஷாம்பிணை பயன்படுத்திய பிறகு  நன்கு தலைமுடியை அலசிய பின்பு கண்டிஷ்னரை உபயோகிக்க வேண்டும்.  கண்டிஷனர் பயன்படுத்தும் போது அதுகுறித்த முறையாக அறிந்து தெரிந்து தயாரிப்புகளை வாங்க வேண்டும். தலைமுடியின் பராமரிப்பை உறுதி செய்யும் ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னரில் குறைந்த கெமிக்கல் பயன்பாடு இருக்குமாறு வாங்க வேண்டும்.

கண்டிஷ்னர் சாம்பூவிக்குப் பின் தலைமுடியை நன்கு அலசியப் பின்  தலையில் தேவையான அளவு எடுத்து தடவவும். பின்பு நன்றாக அதனை ஜெண்டிலாக மாசாஜ் செய்து அலச வேண்டும்.  ஒரு நிமிடத்திற்கு  மட்டும் விட்டு அலசி விடுங்கள். மேலும் கண்டிஷ்னரை உச்சந்தலையில் பயன்படுத்தாமல் முடியின் நடுப்பகுதி முதல் கீழ் பகுதி வரை மட்டுமே உபயோகிக்க வேண்டும். 

ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து உங்கள் தலை முடியை அலசுங்கள். அதாவது 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் 2 பங்கு தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள். ஆனால் உங்களது ஷாம்பினை தேர்ந்து எடுத்து பயன் படுத்தலாம்.  தேங்காயை அரைத்து அதன் பாலினை எடுத்து தலையில்  சாம்பூவிற்குப் பதில் பயன்படுத்தலாம்  தேங்காய் பாலுடன் ஆலோவீரா ஜெல்லினை கலந்து தடவி நன்றாக அலசினால் முடிக்கான போசாக்கு குறையாமல் இயற்கை முறையில் கண்டிஷ்னர் செய்யலாம்.
 
கண்டிஷ்னருக்கென்று  சில பளபளப்புத்தன்மை சிக்கற்ற சில்கியாக முடியை வைத்திருக்கும். இன்னும் முடி உதிர்வையும் குறைக்கும் ஆனால் ஆயுர்வேதம் கலந்த பொரட்களை பயன்படுத்தினால் குறைவான கெமிக்கல் பயன்பாடு இருக்கும்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments