அழகு கூந்தல் வளர ஆம்லா சீயக்காய் ஷாம்பூ!

ஆழகு கூந்தல் வளர்ச்சிக்கு   வீட்டிலேயே சீயக்காயுடன் நெல்லி கலந்து  எளிதில் ஷாம்பூ செய்யும் முறை பின்ப்பற்றி தயாரிக்கும் ஷாம்பூ கேசத்தை பராமரித்து  தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு, மாசு, பூச்சு  வெட்டு ஆகியவற்றிலிருந்து கூந்தலை காத்து முடிவளர்ச்சியை தூண்டுகின்றது.

மேலும் இம்முறையால் செய்யப்படும் சீயக்காய்  ஷாம்பூ எளிதில் செய்யலாம். மற்றும் அதனை அறை வெப்பநிலையிலேயே 40 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.



வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பு செய்ய தேவைப்படும் சீயக்காய் மற்றும்    4 மலை நெல்லி அத்துடன்  4 எலுமிச்சை மேலும் பூங்ககாய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றினை கொண்டும் வீட்டில் எளிதில் ஷாம்பு செய்யலாம்.

பூங்ககாய் 100 கிராம் எனில் சீயக்காய் 100 கிராம் அளவுகள் செய்ய போதுமானது ஆகும்.

பூங்ககாய்,  சீயக்காய் கலவையை 10  மணி நேரம்  ஊரவைக்க வேண்டும்.   ஐந்து மலை நெல்லிக்காய்கள் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இரண்டு  எலும்பிச்சை சாற்றினை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் 10 மணி நேரம் நீரில் இருந்த பூங்ககாய் அல்லது பூந்திக்காய்  நுரை வளம் தரும் தன்மை கொண்ட முன்னோர்களால் மாசுநீக்கியாக, சிறந்த கண்டிசனராகப் பயன்படுத்தப்பட்டு வந்த காய்களையும்,
சீயக்காயையும் இட்டு அவற்றுடன்  பத்துமணிநேரம் ஊரவைக்க வேண்டும்.

ஊரவைக்கப்பட்ட கலவையுடன்   மலை நெல்லி மற்றும்  எழும்பிச்சை சாற்றினை  கலந்து கைகளால் அதனை நன்கு நுரை வளம் வரும்வரை  பிசைந்து அவற்றை வடிக்கட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி  சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தலாம்.

ஆம்லா, சீயக்காய் சாம்பூவினை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளரத் தொடங்கும். பேன், பொடுகு தொல்லை மறையும். நாமே  ஷாம்பூ தயாரிக்கும் பொழுது செலவு குறைவு மேலும் இந்த ஷாம்பூவை வீட்டிலேயேதயாரிப்பதால் நமது ஆரோக்கியத்தை நாமே பாதுகாக்கலாம். 

மேலும் படிக்க: 
ஹெர்பல் ஷாம்பூ தயாரிக்கும் முறை

Post a Comment

0 Comments