தமிழ் மொழியில் உள்ள தமிழ்நூல்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். அவை ஒவ்வொன்றும் தனித்திறமை வாய்ந்தது ஆகும். ஆகையால் அடைமொழியால் குறிக்கப்படுகின்றன. அத்தகைய நூல்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
இசைப்பாட்டு - பரிபாடல் , கலித்தொகை
இயற்கை இன்ப வாழ்வு நிலையம்- சிலப்பதிகாரம்
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை
உழத்துப்பாட்டு - பள்ளு
கம்பர் த நூலுக்கு இட்டப் பெயர் - ராமாவதாரம்
கற்றறிந்தோர் ஏற்கும் நூல் -கலித்தொகை
கிறிஸ்த்துவர்களின் களஞ்சியம்- தேம்பாவணி
குட்டி திருவாசகம்- திருக்கருவை பதிற்றுப் பத்தாந்தாதி
குட்டி தொல்காப்பியம்- தொன்னூல் விளக்கம்
குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
குறத்திப் பாட்டு குறம், குறவஞ்சி நாட்கம்- குற்றாலக் குறவஞ்சி
சின்னூல் என்பது- நேமிநாதம்
செந்தமிழ்க்காப்பியம் , முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமை காப்பியம், புரட்சிக் காப்பியம், உரைநடை யிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு , சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், உலக்ப்பொதுமறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யாமொழி, ஈறடி வெண்பா இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயர்நிலை - திருக்குறள்
தமிழ்மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
தமிழர் வேதம்- திருமந்திரம்
தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் திருக்குறள்
தமிழ் வேதம் , சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி- திருவாசகம்
தமிழின் முதற்கலம்பகம்- நந்தி கலம்பகம்
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை
திருத்தொண்டர் புராணம் , வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம்- பெரிய புராணம்
தூதின் இலக்கணம் -இலக்கண விளக்கம்
நட்புக்கு கரும்பை உவமையாக பாடப்பெற்ற நூல் - நாலடியார்
நெடுந்தொகை - அகநானூறு
மேலும் படிக்க:
0 Comments