பட்ஜெட் விலையில் ராயல் எனபீல்ட் புதிய வரவாகவுள்ளது!

ராயல் என்பீல்ட் என்றாலே ராயலான விலை கொண்டிருக்கும். அதற்கு பயன்படுத்தும் பெயிண்ட் மற்ற பொருட்கள் எல்லாம் சந்தையில் தேடி தேடிப் பார்த்து நம்ம ஊர் இளசுகள் வாங்குவாங்க, ராயல் என்பீல்ட் என்றால் பட்டிக்காட்டு பண்ணை வீடு முதல் நம்ம சென்னை வீடு வரை ஆ, என்று வாய்பிளக்கராங்க, இந்த ஆண்டு ஒரு நல்ல செய்தி என்பீல்ட் விலை குறையுதாம், அதான் ஊரே இப்ப பேச்சு,

ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் மலிவான விலையில் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விலை  குறைவாகத்தான் இருக்கப் போகின்றது.




உலகின் மிக பழமையான, ஸ்டைலான, சும்மா கெத்தான பெயர் பெற்ற  மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு ஆகும்.  தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் செயல்பட்டு  வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டுக்கென்று தனி மவுசு மரியாதையும் உண்டு.
இந்திய மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன. என்றும் கெத்து குறையாத ராயல் என்பீல்டு நிலையும்  இவ்வாறே உள்ளன.

என்னதான் விலை உயர்வு இறங்கினாலும், ராயல் என்பீல்டுக்கு உரிய கெத்து என்றும் அதிகம்தான். உலகெங்கும் பரவியிருக்கும் ராயல் என்பீல்டு ரசிகர்கள் வழங்கும் அமோக வரவேற்புதான் இதற்கு காரணம். ராயல் என்பீல்டு பைக்குகளின் சப்தத்திற்கு என்றே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இளசுகள் முதல் பெருசுகள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புகின்றனர். 

ராயல் என்பீல்டு பைக்குகளை ஓட்டுவதை  ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்கள் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன. இந்திய மட்டுமல்லாது பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை மிக சிறப்பாகவே இருந்து வருகிறது. 
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடலில் 350 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் மிகவும் மலிவான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் விலை 1.21 லட்ச ரூபாயாக உள்ளது.

அதிகமான வாடிக்கையாளர்களை ராயல் என்பீல்டு ஷோரூம்களை நோக்கி திருப்ப விலையைக் குறைந்த பைக்குகளை வெளியிடவுள்ளது.  பட்ஜெட் விலையில் பைக் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் கவனம் கூட ராயல் என்பீல்டு நிறுவனம் மீது திரும்பலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது ரிசனபிள் ரேட்டில் ஒரு பைக்கை  வெளியிடத் திட்டமிட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments