பெண்கள் உலக ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இந்த தொடரினை சிறப்பாக எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி தேசத்தை பெருமைப் படுத்தி வெற்றிகளை பதிவு செய்தது.
ஆட்டம் விருவிருப்பாக ஓடி கொண்டிருக்க மகளிர் அணியினர் சிறப்பான பார்மில் இருந்தனர். ஆனால் விதிக்குத்தான வில்லத்தனம் செய்வதில் என்ன அலாதியோ, இந்திய அணி முதலீக் போட்டியில் உருகுவேயை வென்றது. போலந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டியில் சிலியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது இந்திய மகளிர் அணி.
பெண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டி ஹிரோஷிமா நகரில் ஜப்பானை எதிர்கொண்டு நடைபெற்றது. விருப்பாக நடைபெற்ற போட்டியை ஜப்பானின் கைவசம் இருந்து மெல்ல தன் பக்கம் இழுத்து 3-1 என்ற கோலில் வெற்றியைப் பெற்றது.
பெண்கள் உலக ஹாக்கி அணியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்திய அணி 2020 ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதி சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.
தந்தையின் தங்கமகள்!
இந்திய ஹாக்கி அணியின் முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதிப் போட்டியில் விளையாடும் தருணத்தில், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை லால்ரெம்சியாமின் தந்தை உயிரிந்தார்.
தன் தந்தை இறந்த செய்தி கேட்டதும் துடிதுடித்துப் போன லால்ரெம்சியாமி தேசத்தை பெருமைப்படுத்தும் இத்தருணத்தில் "என் தந்தை இழப்பு பெரிய இழப்பு எனினும் தேசத்தை பெருமைப் படுத்தி என் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டிய தருணம்" என்று தொடர்ந்து போட்டியில் விளையாடினார்.
இந்தியாவின் இறுதிப் போட்டியில் வெற்றியைப் பெற்று தகுதிப் பெற வேண்டும் என்று அணியினர் அனைவரும் ஒன்றுப்பட்டு வெற்றியை பெற்றனர். லால்ரெம்சியாமிவின் தந்தைக்கு வெற்றியை சமர்பித்தனர்.
தேசத்தை பெருமைப் படுத்த நமக்கு கிடைத்த பெண் சச்சின் இவர், வடகிழக்கு மாநிலத்தில் பிறந்து தேசத்தை பெருமைப்படுத்திய தங்க மகள் வெற்றியுடன் நாடு திரும்பினார். கண்ணீருடன் தாயை கட்டி அணைத்து கட்டுக்குள் அடக்கி வைத்த துக்கத்தை வெளிப்படுத்தினார்.
நாட்டின் பெருமையை காத்த நமது பெண் சச்சின் லால்ரெம்சியாமிவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தங்க மகளே தலை நிமிர், கலங்காதே தேசமே தலைவணங்குகிறது உன் திறனையும் வெற்றியும் உன்னோடு இணைந்து கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றோம்.
மேலும் படிக்க:
0 Comments