வாழ்க்கையில் உங்களுக்கு தேவையானது எல்லாம் பெறலாம். உங்கள் தேவை என்னவாக இருந்தாலும் அதனை பெறலாம். உங்களுக்கு தேவைப்படும் பொருள் எந்த உயரத்தில் எப்படி இருந்தாலும் அதனை பெறலாம்.
மனித தேவைகளை பூர்த்தி செய்வதே பிரபஞ்சத்தின் பணியாகும். உங்களது விருப்பங்கள் நீங்கள் நினைத்தவாரே நடைபெறும் அது அவ்வாறே நடைபெற வேண்டுமெனில் அதற்கான ரகசியத்தை முதலில் அறிய வேண்டும்.
மனித தேவைகளை பூர்த்தி செய்வதே பிரபஞ்சத்தின் பணியாகும். உங்களது விருப்பங்கள் நீங்கள் நினைத்தவாரே நடைபெறும் அது அவ்வாறே நடைபெற வேண்டுமெனில் அதற்கான ரகசியத்தை முதலில் அறிய வேண்டும்.
விருப்பங்களை பெறும் ரகசியம்:
நீங்கள் விரும்பும் ஒரு பொருள் மற்றும் சூழல் பெற வேண்டுமா, நீங்கள் விரும்பும் மனிதர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அப்படியெனில் அதற்கான ரகசியத்தை தெரிந்து கொள்வோம். உங்களது விருப்பங்களை நீங்கள் அடைந்துவிட்டதாக தொடர்ந்து கற்பனை செய்ய வேண்டும்.
உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நீங்கள் நினைத்தவாறே அச்சு அசலாக நடந்தமாதிரி தொடர்ந்து கற்பனை செய்யுங்கள், நீங்கள் நினைத்தவையெல்லாம் அடைய உதவிகரமாக இருப்பது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பு விசை ஆகும்.
ஈர்ப்பு விசை:
காந்தத்திற்கு இருக்கும் ஈர்ப்பு விசை போல் நமது எண்ணங்களுக்கும் ஈர்ப்பு விசை அதிகமுண்டு அந்த ஈர்ப்பு விசையால் நாம் உறுதியாகப் ஒரு பொருளை அடைய விரும்பினால் அதனை பெறுகின்றோம். நமது விருப்பங்களை தொடர்ந்து நடைபெறுவதாக நம்பும் பொழுது நிச்சயம் அது நடைபெறுவதற்கான வாய்ப்பு அதனை நடத்துவதற்கான வழிகாட்டலும் கிடைக்கும்.
விருப்பங்களை அடையும் வழிமுறைகள்:
நீங்கள் நினைத்ததை நினைத்தவாறே நடக்க நீங்கள் நினைத்தவற்றை நடந்தது போல் அதனால் நீங்கள் பெரும் மனநிறைவை எண்ணி மகிழ்ச்சியுறுங்கள். இந்த மகிழ்ச்சியுணர்வு முக்கியமானது ஆகும்.
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிய பிரபஞ்சம் மற்றும் அதற்கு உருதுணையான இருந்த மற்ற காரணிகள் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள், எண்ணங்களை நீங்கள் நிறைவேறுவது போல் கற்பனையில் இருக்கும்பொழுதும் எப்பொழுதும் உங்கள் சுற்றியுள்ள அனைத்திற்கும் நன்றி தெரிவியுங்கள், அதனை ஒரு சடங்காகக கருதிசெய்தலை விடவிரும்பி செய்யுங்கள்.
நீங்கள் கேட்டது கிடைக்கும் ஒருவேளை நீங்கள் கேட்டது கிடைக்கவில்லையெனில் ஏமாற்றம் அடைவதை விட நீங்கள் கேட்டது கிடைத்து விட்டது என நம்புங்கள், நீங்கள் விரும்பியது உங்களை அடைய வந்து கொண்டிருக்கின்றது என நம்புங்கள்.
நீங்கள் கேட்டது கிடைக்கும் என நம்பிக்கையில் எள் அளவும் பிசகாமல் தொடர்ந்து நீங்கள் நம்பும் பொழுது உங்கள் விருப்பங்களை நிறைவேறுவதில் எந்த மாற்றமும் இருக்காது.
உங்கள் விருப்பங்களை பேனாவால் எழுதி பட்டியிடுங்கள் உங்கள் எண்ணங்கள் உங்களை நோக்கி வருவதாக தொடர்ந்து நம்புங்கள் நிச்சயம் நீங்கள் அடைவீர்கள்.
விருப்பங்கள்:
நீங்கள் விரும்பும் கார், சைக்கிள், கணவர், செல்வம், விருப்ப வாழ்க்கை முறை என எதுவானாலும் எந்த உயர அளவிற்கும் நாம் பெற விரும்பலாம். அதனை தெரிந்தவர்கள் தான் உலகத்தில் மிகச்சிறந்த நிலையில் இருந்த மேதைகள் அது குறித்து நம்மிடையே தெரிவிக்கவில்லை. இந்த பிரபஞ்சத்தில் ஆற்றல் மிக்கவர்கள் மனித சக்தி ஆகும் அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
0 Comments