தேசிய கொடி வரலாறும் போட்டி தேர்வில் பெற பொது அறிவும் கற்போம்!

இந்திய இயர் புத்தகமானது வருடம் தோறும் மத்திய அரசினால் வெளியிடப்படுகின்ற ஆண்டு மலர் ஆகும். இப்புத்தகம் நாட்டின் முக்கிய வளங்கள், திட்டங்கள்,   வரலாற்றுடன் அந்தந்த ஆண்டின் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்கின்றது. அதனை போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் பயன்படுத்தி படித்து வெற்றி  பெறுவார்கள்.


யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகள் அனைத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து தேர்வில் வெற்றி பெற  உதவுது இந்தியா இயர் என அழைக்கப்படும் வருட மலர் ஆகும்.  ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்படும் அந்த புத்தகத்தினை தமிழில் தலைப்புக்கள் வாரியாக தனியாக தொகுத்து கொடுக்கின்றோம் அதனை படியுங்க எந்த தேர்வானாலும் தைரியமாக எழுதி வெற்றி பெறலாம்.

தேசிய கொடி தோற்றம் :
1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஏற்றப்பட்ட தேசிய கொடியின் வரலாறானது  மிகச் சிறப்பு வாய்ந்தது. 1904 ஆம் ஆண்டு  சுவாமி விவேகானந்தரின் சீடையான நிவேதிதா உருவாக்கிய கொடியானது நிவேதிதா கொடி என அழைக்கப்பட்டது.

1906 இல் பார்சிம் பாகம் சதுக்கத்தில் சிவப்பு ,பச்சை, மஞ்சள் கிடைமட்டமாக கொண்ட கொடி அறிமுக்கப்படுத்தப்பட்டது. அவற்றில் பச்சை நிறம் இஸ்லாம் மதத்தைதையும் இளஞ்சிவப்பு நிறம், இந்து, புத்தம் வந்தே மாதரம், பிறை சந்திரன் போன்றவற்றுடன் 8 தாமரைகள் கொண்டிருந்தது. 

1907 இல் நடசத்திரங்களுடன் கூடிய மாற்றமும். 1917 தேசிய கொடி மூன்றாம் முறையாக மாற்றப்பட்டது. 1917 தேசிய கொடியில் மூன்றாம்  முறையாக அன்னிபெசண்ட், திலகர் இணைந்து  கொடியில்  மாற்றங்கள் புகுத்தி அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் அறிமுகப்படுத்திய கொடியின் மேற்பகுதி இடது புறத்தில் யூனியன் ஜாக் கொடி பிறகு வலதுபுறம் பிறை சந்திரனுடன் கூடிய நட்சத்திரமும் நடுவில் நட்சத்திரங்களுடன் உருவாக்கப்பட்டது. இக்கொடி  மக்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை.

பிங்காலி வெங்கய்யா:
 1931 ஆம் ஆண்டு விஜயவாடாவில் இந்திய  தேசிய  கமிட்டி கூட்டத்தில் பிங்கிலி வெங்கய்யா இந்து முஸ்லீம்  ஒற்றுமையை வலியுறுத்தி  கொடியை உருவாக்கி காந்தியிடம் கொடுத்தார்.  பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த காவி, வெள்ளை, நடுவில் சக்கரம், பச்சை நிறம் கொண்டது. காவி நிறம் தைரியத்தையும், வெள்ளை சத்தியம் மற்றும் அமைதி பச்சை நிறம் நம்பிக்கை  மற்றும் செம்மைக்கு என  பொருளுடன் உருவாக்கப்பட்டது.


2ஆம் உலகப் போரில் சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையானது ஆசாத் ஹிந்து என பொறிக்கப்பட்ட காவி, வெண்மை மற்றும் பாயும் புலியை நடுவிலும் பச்சை நிறம் அடியில் கிடைமட்டமாக கொண்ட தேசிய கொடி முதன் முறையாக இந்திய தேசிய படையால் பயன்படுத்தப்பட்டது. 

இந்திய தேசிய சின்னங்களுள் ஒன்றான தேசிய கொடி: 
இந்திய விடுதலை காலத்தில் 1947  ஜூலை 22 ஆம் நாள், இந்திய அரசியல் நிர்ணய சபையால் அறிவிக்கப்பட்டு, முதன் முறையாக 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. 

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் : 
இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் இந்திய தேசிய கொடிக்கு அளவு முறை நிர்ணயிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு  மெட்ரிக் முறை என பன்னாட்டு  விதிகளின் படி அளவினை நிர்ணயித்தது. 

தேசிய கொடியின் உருவாக்கும் முறை: 
இந்திய தேடிய கொடியானது காதி துணியில் கைகளால் நெய்யப்பட வேண்டும்,  இந்திய தேசிய கொடியை  உருவாக்கப்பட 51-ஏ சட்டங்களின்படி முறையான  மரியாதை  கொடுக்கப்பட வேண்டும்.
1950 இன் சட்டத்தின் படி தேசிய கொடியை முறையற்று பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும். தேசிய சின்னங்களை அவமதிப்பதற்கு எதிரான நேசனல் ஹானர் ஆகட் படி தண்டிக்கப்படுவார்கள், 

சிறப்புத்தன்மை: 
இந்திய தேசிய  கொடியின் சிறப்புத்தன்மையை வரையறுத்து  கொடுத்த பெருமை நாட்டின் முதல் குடியரசு தலைவராக இருந்த சர்வப்பள்ளி ராதகிருஷ்ணன் அவரையே சாரும்.

  1. சாதுக்களின் நிறமான காவிநிறம் பொருளை துறப்பதை குறிக்கும். நம் நாட்டிலுள்ள தலைவர்கள் பொருளின்  மீதுள்ள  பற்றை துறந்து வேலையின் காரணத்தில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
  2. ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம் நன்நடத்தையையும், நேர்மையையும், நடுவில் வெள்ளை நிறம் குறிக்கின்றது. 
  3. பச்சை நிறம்  நிலத்திற்கு  உள்ள செடிகளின் உறவை வெளிப்படுத்துகின்றது. 
  4. அசோக சக்கரம் நியாய தர்மத்தினை அடிப்படையாக கொண்ட சக்கரத்தை கொண்டது. இது தொடர்ந்து தேசத்தை முன்னேற்றி செலுத்துவதுடன் அமைதியையும் காலத்திற்கேற்றவாறு மாற்றத்தையும் ஏற்க வலியுறுத்திக் கூறுகின்றது.  தர்மச் சக்கரம் 24 ஆரங்கள் கொண்டது. 
தேசிய கொடி விதிமுறைகள்: 
தேசிய கொடியானது அனைத்து பொது இடங்களிலும் சூரியன் உதயத்திற்கு முன்பு ஏற்றி சூரிய உதயத்திற்கு பின் இறக்க வேணடும்.
தனியார் நிறுவனங்கள்  தேசிய கொடியை விதிமுறைப்படி பயன்படுத்தலாம். 
தேசிய கொடியை உடையில் பாதியாக பயன்படுத்தகூடாது. 
தேசிய கொடியினை எரித்தல், கிளித்தல், தழைகீழாக ஏற்றுதல்
தண்டனைக்குரிய கூற்றமாகும். 
தேசிய கொடியானது தலைவர்கள் இறக்கும்  பொழுது துக்கம் அனுசிடிக்கும் விதமாக அரை கம்பத்தில் பரக்கவிடப்படுகின்றது. 
தலைவர்கள், ராணுவ வீரர்கள் இறக்கும்பொழுது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக  உடலில் தேசிய கொடியை போர்த்தப்படுவார்கள். 
தேசிய கொடியை பொருளை மூடி வைக்கும் அழங்கார பொருளாக பயன்படுத்தகூடாது.

கேள்விகளின் தொகுப்பு :
  1. தேசிய கொடியின் சிறப்பு தன்மையை  வரையறுத்தது யார்?
  2. தேசிய கொடியானது யாருடைய உடலில் போர்த்தப்படும்?
  3. தேசிய கொடியை எந்த துணிவகைகள் மூலம் உருவாக்கலாம்?
  4. சுதந்திரத்திற்கு பின் முதன் முதலில் கொடியேற்றப்பட்டது எப்பொழுது?
  5. முதன் முதலில் தேசிய கொடியை வடிவமைத்து கொடுத்த பிங்காலி வெங்கய்யா எந்த மாநிலத்தை சார்ந்தவர்?

Post a Comment

0 Comments