மக்கள் முன்பு கொஞ்சம் சிரிங்க, நட்புடன் அவர்களுக்கான சேவையை செய்யுங்க்- ஆந்திர முதல்வர் ஜெகன்

இதுவரைக்கும் நடந்த மணல் கொள்ளை, வளங்கள் சுரண்டல், ஆட்சியாளர்களின் ஆதிக்கம் ஆகியவற்றை   வெளிப்படையாக ஆந்திர முதல்வர்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி சிரித்து பேசுங்க மக்களுக்காக நாம் செயல்படுகின்றோம் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்றார். 

சுமார்ட் போன்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் சமூக சிக்கல்கள், பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள், கிராமங்களின் செயல்பாடுகளின் குறைபாடுகள் போன்றவற்றை நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் நேரடியாக கிராமங்களில் சென்று மக்களிடம் பேச வேண்டும். 



 காவல் துறைக்கு இருக்க வேண்டியது கம்பீரம் மற்றும் மக்களிடம் நட்புடன் பழகுதல்  வேண்டும். "நான் உங்களுடன் இருக்கின்றேன் என்ன இடையூறுகள் வந்தாலும்  கடமையை சிறப்பாக  செய்யுங்கள்" என்றார்

நேரடியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எனது ஆட்சி காலத்தில் இருக்க வேண்டும். மக்களிடம் நேரடியாக கலந்து செயல்பட வேண்டும். மக்களில் ஒருவராக இருந்து செயல்படுவதையே தான் விரும்புவதாக சீரியஸ்  டாக்குகள் கொடுத்தார் ஆந்திர முதல்வர். 

இளம் வயது முதல்வர், எப்படி செய்ய போறாரோ, என்ன செய்யப் போராரோ என்று  மக்கள்  கொஞ்சம் யோசித்தே ஓட்டளித்தனர் ஆனால்  ஆந்திராவின் முதல்வராக பதிவியேற்ற நாள் முதல் சிறப்பான நடவடிக்கைகளால் இந்தியா ஊடகங்களில் டிரெண்டிங் கலெகசனில்  டாப்பில் இருக்கின்றார். 

ஊழல், சட்டத்திற்குப்  புறம்பான நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும், யாராக இருந்தாலும் கேளுங்கள், நான் எப்பொழுதும் தலையிட மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளார். 

பார்போம், என்ன செய்ய போகின்றார் எப்படி செய்ய போகின்றார் என்பதை பொருத்திருந்து பார்போம்.  எது எப்படியோ தினம் ஒரு செய்தி, தினம் ஒரு பரப்பரப்பு நமது மீம்ஸ்  கிரியேட்டர்களுக்கு ஜெகன் கொடுத்து கொண்டிருக்கின்றார் என்பது  மட்டும் புரிகின்றது.

 மேலும் படிங்க:

அதிரடி நாயகன் ஆந்திர முதல்வர் ஜெகன் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபிசர்களை வெலுத்து வாங்கினார்!,,

Post a Comment

0 Comments