அதிரடி நாயகன் ஆந்திர முதல்வர் ஜெகன் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபிசர்களை வெலுத்து வாங்கினார்!,,

அதிரடி நாயகன் சினிமா பாணியில் செயல்பட்டு மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பையும் ஓட்டையும்  பெற்ற முதல்வரான நமது ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நாளுக்கு நாள் அதிரடி அறிவிப்புகளை அரசு ஆணைகளாக  வெளியிட்டு  மக்களிடமும் மீம்ஸ் மாம்ஸ்களிடமும்  அதிக அளவில்  உலா வருகின்றார் ஆந்திர முதலவர். 

நேற்று நடத்தி மாநிலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆலோசனையில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார்.  மாநிலத்தில் மண் அல்லுதலை  தடுக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் ஏக கொள்ளை, எம்எல்ஏக்களின் அராஜகம் கொட்டி கிடக்கும் ஆந்திராவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ன செய்தீர்கள், என்ன வெளுத்து வாங்கினார்.  நில ஆக்கிரமிப்பு, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற கேள்விகளை முன் வெடித்து தள்ளினார்.

இதுதான் ஆட்சியா, இதுதான்   சிறந்த ஆட்சியா என்று உணர்ச்சி பொங்காமல்  நேரடியாக  ஆட்சியாளர்களிடம் கேள்விகளால் துளைத்து எடுத்தார்.  மக்களால்  நாம், மக்களுக்காக நாம்,  என்பதை வலியுறுத்தி  பேசினார்.
 
சிறந்த நிர்வாக அதிகாரிகள் ஏன்  அமைதி காத்து நிற்க வேண்டும் என்பதை தெரிவித்து போதும் இது போதும் இனிமேல் நடவடிக்கைகள்  அனைத்தும் கில்லியாக இருக்க வேண்டும் இல்லையேல் நான் சொல்லி அடிப்பேன் என்பதை நினைவூட்டினார் ஆந்திர முதலவர். நேர்மையாக ஆட்சி, முறையான நடவடிக்கைகள் மட்டுமே இனி நடக்க வேண்டும் என்பதை  எச்சரிக்கையாக வெளிப்படுத்தினார்.

ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். ஆலோசனை கூட்டித்தில் சிலைகளைப் போன்று வாயடைத்து தலையாடமல் ஐஏஎஸ், ஐஎப்எஸ் ஆபிசர்கள் ஆமோதித்தனர். .

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளி கல்வித்துறையில் வாரம் 5 நாட்கள் படிப்பும், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை நோ ஸ்கூல் பேக் என்றும் அந்த நாள் முழுமையாக மாணவர்களுக்கு விளையாடும் நாளாக இருக்க அறிவிப்பினை வெளியிட்டு மாணவர்களை குதுக்கலிக்க வைத்தார். 

அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்பும் ஏழை எளிய குடும்ப பெற்றோர்களுக்கு  ரூபாய் 15,000  2020 ஆண்டு ஜனவரி 2 முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என  ஆணை பிறப்பித்தார். 



கல்வித்துறை அரசு சிறப்பாக கவனித்து மாணவர்களுரிய அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என மாவடட் ஆட்சித்தலைவர்களை அழைத்து  ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

நேற்று ஜெகன்  அரசு பள்ளிகளின் தரத்தினை  உயர்த்தவும், பள்ளிகளின் சுற்றுசூழலினை ஆரோக்யமாக வைத்து கொள்ள மிகுந்த அக்கறை காட்டி வருகின்றார். அந்த வகையில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியாளர்கள் ஏதாவது ஒரு  பள்ளியை   தேர்ந்தெடுத்து அரசு பள்ளி விடுதியில் இரவு தங்கிப் பார்க்க வேண்டும். அறிவிப்பின்றி பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதி வாய்ப்பினை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் கல்வித்துறையினை மெருக்கூட்டி பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் வசதி வாய்ப்புடன் மாணவர்கள் படிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தனது ஆணையில் தெரிவித்துள்ளார். 

பிரமிக்கும் பிரம்மாண்ட நடவடிக்கைகளால் ஆந்திராவின் ரீல் ஹீரோக்களை மிஞ்சும் அளவில்  தனது செயல்பாட்டினை சிறப்பாக்கியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. தமிழ்நாட்டிலும் இது போன்ற மேஜிக்  நடக்குமா,  நடந்தா நல்லாதான் இருக்கும்.
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments