கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரொனோ வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 25 நாடுகளில் கொரொனோ வைரஸ் தோற்று பரவிவிட்டது.
சீனாவில் இதுவரை 565 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மற்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மற்றும் இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வை சீன டாக்டர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி பதிவிட்டார்.
ஆனால் அவர் மக்களிடையே பீதியை கிளப்புகிறார் என்றும் முற்றிலும் பொய்யான கருத்து என்றும் அனைவரும் எதிர்த்தனர். சீன போலீஸ் அதிகாரிகள் அவருக்கு தண்டனையும் கொடுத்தனர். டாக்டர் லீ வெண்லிஆங்கு அவருடைய நோயாளியிடம் இருந்து கொரொனோ வைரஸ் தொற்று பரவிவிட்டது.
பின்பு இவர் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி 1ஆம் தேதி இவருக்கு கொரொனோ இருப்பது கண்டறியப்பட்டது. கொரொனோ வைரஸின் தீவிரத்தால் டாக்டர் லீ வெண்லியாங் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்தார் இந்த செய்தியை அறிந்த உலக சுகாதார நிறுவனம் இறந்த டாக்டருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது மற்றும் கொரொனோ வைரஸின் தீவிரத்தை குறைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.
1 Comments
nice one thank you
ReplyDelete