சருமத்தைப் பொலிவுறச் செய்ய எளிய டிப்ஸ்

பெண்கள் மற்றும் ஆண்கள்  சரும பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று, கடும் வெய்யில் காரணமாக எளிதில் சருமத்தில் கருமையான படலம் எளிதில் படிகின்றது. அதற்காக துப்பட்டா அணிந்து செல்லும் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர்.
துப்பட்டா அணிந்து   செல்வதால் முகமூடியானது நமது சுவாசிப்பதில் சிக்கல் உண்டு செய்கின்றது. மேலும் அது வியர்வை துவாரங்களில் அழுக்குகள்  படியும், இதனை  உணர்ந்து பெண்கள் தங்களை பாதுகாப்பதில் சரியான அனுகுமுறைகளை கையாள வேண்டும்.


நீங்கள் வெய்யிலில்  செல்லும் நபர்கள் எனில்  உங்களுக்கான ஸ்கின் கேர் பாதுகாப்பு டிப்ஸ் இங்கு கொடுத்துள்ளோம். வெய்யிலில் ஏற்படும் நிறம் மங்கு மற்றும்  பொலிவை உண்டாக்க கிழே கொடுக்கப்பட்டுள்ள முறையினைப் பின்பற்றி நிறம் மங்கை போக்கி சருமத்தை பொலிவுறச் செய்து  காத்துக் கொள்ளலாம்.

இங்கே எளிய வழிமுறைகளாக தேவையான பொருட்கள் ஆப்பிள் சிடர் வினிகர் முறையும் உடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, சோடா உப்பு  கலந்த முறையையும்   பின்பற்றி சருமத்தினை பொலிவுறச் செய்யலாம். 

தினமும் குளிக்கும் நீரில் 5 சொட்டு   ஆப்பிள் வினிகரை கலந்து குளித்து உடல் சருமம் பொலிவுறும்,  கருமை மற்றும் நிற மங்கு மாற்றத்தை காணலாம்.

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு பிழிந்து அத்துடன் சோடா உப்பினை ஒரு ஸ்பூன் அளவு கலக்க வேண்டும். அப்பொழுது நுறையானது கிளம்பி வரும் அந்த கலவையை  எடுத்து நன்றாக கைகால்களுக்கு பூசி வர கை மற்றும் கால்களில் ஏற்படும் கருமை,  நிறமங்கானது 20 நிமிடங்களில் திறண்டு வரும் பின் கழிவினால் பொலிவை காணலாம். 

தேங்காய் எண்ணெய் சேர்த்திருப்பதால் எந்த ஒரு சைடு எஃபெக்ட்டும் ஏற்படாது. எலும்பிச்சை மற்றும் சோடா உப்பு கலந்த கலவையை முகத்தில்  பயன்படுத்தக்கூடாது. மேலும் வாரம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வீட்டிலே உங்கள் அழகை பராமரித்து  பாதுகாக்கலாம். இதனால் செலவு குறைவு மேலும் எளிய முறையாக இருப்பதால் அனைவராலும் செய்ய  முடியும்.

Post a Comment

0 Comments