ஸ்கூலுக்கு நேரமாச்சு!,, லீவூ முடிஞ்சாச்சு!,, சுட்டிகள் எல்லாம் ஸ்கூலுக்கு கிளம்பியாச்சு!,,

கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதம் முழுவதும் மாமா வீடு, பாட்டி வீடு, கோடை சுற்றுலா சென்றவர்கள் அனைவரும் பள்ளிக்கான புது யூனிபார்ம் மற்றும் வாட்டர் பாட்டில் தொடங்கி அனைத்து உபகரணங்களையும் வாங்கிய்  மாணவர்களை கிளப்பி அனுப்பியாச்சு. 

இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான சீருடை மாற்றங்கள் பெருகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இனிமேல் டிமிக்கி  அடித்து 10 மணிக்கு ஸ்கூலுக்கு வரமுடியாது.


ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவ தேர்வுகள்  நீக்கப்பட்டு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார்ப் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளையும் செம்மையாக செயல்படுத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டியில் புது அனுகுமுறையுடன் பாடம் கற்பார்கள். 

ஆசிரியர்கள் இனிமேல் எங்கும் ஓட முடியாது,  ஒளிய முடியாது என்னும் அளவுக்கு கெடுபிடிகள் கொடுத்து அரசு இயங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இஸ்ரோ தலைவர்  புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி அரசுக்கு அனுப்பியுள்ளார். அவற்றில் மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.  இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்க்க அது குறித்து மத்திய அரசு யார் மீதும் எந்த மொழியும் திணிப்பு இல்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments