பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு!

அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர், தொடர்ந்து அதிரடி உத்தரவுகளால்  பரப்பரப்பை ஏற்படுத்திவருகின்றார்.  பதவியேற்ற நாள் முதல் இன்று வரை அடுத்தடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து ஆந்திராவில் தவிர்க்க முடியாத தலைவராக நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றார் என்பதனை  அவரது மக்கள் நல திட்டங்கள் மூலம் அறிய முடிகின்றது. 

ஆந்திர முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடு  ஆட்சிகாலத்தில் ஆலோசனை  செய்ய கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் மேஜை, நாறகாலி பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்ப பட்டது. மேலும்  கட்டிடமானது சட்ட விரோதமாகக் கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தது, ஆகவே அதனை இடிக்க இன்று உத்தரவிட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. கட்டிட இடிப்பு  பணி நாளை துவங்கப்படவுள்ளன.  இவர் பதிவியேற்ற நாள் முதல் தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை அறிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜ சேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று முதல்வராகப் பதவியில் அமர்ந்தார்.



ஆந்திராவில் மாணவர்களுக்கு 5 நாள் வகுப்பு பாடமும் 6 ஆம் நாள் புத்தகம் இல்லாமல் விளையாட பள்ளிக்குச் செல்லும் உத்தரவை பிறப்பித்து மாணவர்களுக்கு ரிலாக்ஸ் கொடுத்தார்.   

முதல்வராகப் பதிவியேற்றதும் சுகாதரத்துரை பணியாளருக்கு ரூபாய் 3000 முதல் ரூபாய் 10,000 வரை ஊதியத்தை அதிகப்படுத்தி தர ஆணையில் கையெழுத்திட்டார். 

விவசாயிகளுக்கு போலாவாரம் திட்டத்தை விரைவுபடுத்தி புதிய திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பில் வெளியிட்டிருந்தார். 

ஆந்திர விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 12,500 ரூபாய் சலுகையை பெற ரையத் பரோசா என்ற திட்டத்தின் கீழ்  செயல்படும் என அறிவிப்பினை வெளியிட்டார். 

அந்தந்த சமூகப் பிரச்சனைகள் கருத்தில் கொண்டு 5 துணை முதல்வர்களை நியமனம் செய்தார். மேலும் 25 கேபினட் அமைச்சர்களை அறிவித்து அவர்களின்  பதவிகாலம்   2 1/2 ஆண்டு காலம் இருக்கும் பிறகு மீண்டும் மாற்றம் இருக்கும் என அறிவித்தார். 

வீட்டிற்கே ரேசன் பொருட்களை செப்டம்பர் 1 முதல்  விநியோகிக்க அவர் கொடுத்த திட்டங்கள் மிகுந்த சிறப்பானதாக வரவேற்பை பெற்றுள்ளன. 

தனியார் வசம் ஒப்படைக்காமல் மாநிலப் போக்குவரத்தை அரசே ஏற்று நடத்தும் என்பதுவும்  அவரது  அறிவிப்புகளில் ஒன்றாகும். 

மதுவிற்பனை சட்ட விரோதமாக விற்பனை செய்வது அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க அதிரடியாக செயல்படவும்  உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திராவில் மண் அள்ளுவதற்கும் தடை விதித்துள்ளார். 

போலீஸ்சாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு அளிக்க  ஆணையும் மிகுந்த மகிழ்ச்சியை ஆந்திர காவல் துறைக்கு கொடுத்துள்ளது.
  
தொடர்ந்து அதிரடி காட்டி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது சரி  ஆனால் திருப்பதி தேவஸ்தான் புதிய தலைவராக சுப்பா ரெட்டி எனும் தனது உறவினரை நியமித்தது என்ன கணக்கு என்பதுதான் கொஞ்சம் நெருடாலாவுள்ளது. இன்னும் வரும் நாட்களில் அவரின் செயல்பாட்டில் அனைத்தும் தெரியவரும். அதுவரை அவர் மாஸ் காட்டலாம்.

மக்களை பொருத்த மட்டில் இன்று ஆந்திர நடிகர்களுக்கு இணையாக மாஸுடன் கிளாஸாக ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பான அறிவிப்புகளால்  தொடர்ந்து நன்மதிப்பை பெற்று வருகின்றார். எனினும் அடுத்தடுத்து அவரது அறிவிப்புகளின் செயல்பாட்டில்தான் உண்மை நிலவரம் தெரியவரும் அதுவரை நாம் அவரைப் பற்றிய செய்திகளை மட்டும்தான் அறியமுடியும்.

ஆந்திராவில் ஜெகன் மோகனின் அலையானது எம்ஜிஆருக்கு நிகராகவுள்ளது என அரசியல் மற்றும் ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

Post a Comment

0 Comments