இந்தியாவின் கம்பீரத்தின் தினம், இந்திய தேசிய விமானப் படை தினம் இன்று, 85 வது விமானப்படை தினமாக இந்திய விமானப்படை கொண்டாடுகின்றது.
இந்தியாவின் வான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் போர் விமானங்களை துரத்திப் பிடித்து காவு வாங்க கடந்து கொண்டிருந்த தருணம் அது, அனல் பறக்கும் வேகத்தில், தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க விமானத்தில் கோளாறு காரணமாக பாகிஸ்தான் மண்ணில் தரையிரங்க நேரிடுகின்றது. விமானத்தில் இருந்த வீரருக்கு தான் தரையிரங்கியுள்ள பகுதி எந்த இடம் என தெளிவாக தெரியவில்லை.
எனினும் யூகித்து தூரத்தில் இருந்து வரும் நடுத்தர வயது பெரியவரிடம் தான் இருக்கும் இடத்தை அறிய பாரத் மாதா கி ஜே என்றார், ஆனால் அந்த முதியவரோ பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூற தான் இருக்கும் இடத்தை அறிந்து, தன்னை பின் தொடரும் மக்களிடம் இருந்து தப்பித்து தேசத்தின் பாதுகாப்பு குறிகள் அடையாள முக்கிய ஆவனங்களை எல்லாம் அருகில் ஓடும் நதியில் வைத்து நீரில் கழுவி வாயில் மென்று கம்பீரம் குறையாமல் ஆவனங்களை யாருடைய கையில் கிடைக்காமல் அழித்த மாவீரர், அந்த பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார். ஏற்கனவே கொஞ்சம் உடலில் அடிப்பட்டிருக்க இதுவேறு ஆனால் மூச்சு விடவில்லை மண்ணின் மைந்தன், பாகிஸ்தான் படை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து மாவீரரை அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
தான் யார் என்பதை ரத்தினச் சுருக்கமாக தெரிவித்து கம்பீரத்துடன் செயல்பட இங்கே நாடே கொந்தளிக்கின்றது. அந்த பாதுகாப்பு படைவீரரை உடனடியாக பாகிஸ்தான் அனுப்ப வேண்டும். இதனை இந்தியா அனுமதிக்காது என்ற கர்ஜனை இந்திய தரப்பில் மேலோங்க, நாடெங்கும் பாதுகாப்பூ படை வீரர்கள் குறித்த ஊடகச் செய்திகள், பிரார்த்தனைகள், பாகிஸ்தானுக்கு எதிரான கோசங்கள் என பரபரப்பாக இருந்தது.
இந்தியாவின் கர்ஜனை, உலக நாடுகளின் கண்டனம் பாகிஸ்தானை கொஞ்ச திணரடித்தது. அதன் விளைவாக பல்வேறு கட்ட விதிமுறைகள் கடந்து இந்திய மண்ணில் வாகா எல்லை வழியாக வந்து சேர்ந்தார் மாவீரர் விமானப்படையின் விங்- காமண்டர் அவர் நமது நாயகன் அபிநந்தன் ஆவார். 2019 மார்ச் மாதங்களில் நடந்த சம்பவங்கள் நமது வான்படை வீரத்தை எண்ணி பெருமைப்படச் செய்தது.
தேசம் அவரது வருகைக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தானைப் பாராட்டியது. அத்துடன் அபிநந்தனுக்கு வரவேற்பும் மரியாதையும் செலுத்தியது.
நிர்மல் ஜித் செகான்:
1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் வியூகங்களை உடைத்து மூன்று சேபர் ரக பாகிஸ்தானின் வான் விமானங்களுடன் நாட் ரக போர் விமானம் கொண்டு ஒன் மேன் ஆர்மியாக நின்று தன் உயிரை கொடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற நிர்மல் ஜித் செகான் அவர்களின் வீரத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் தினம் இன்று.
நிர்மல் ஜித் செகான் மற்றும் அபிநந்தன் போன்ற ஆயிரம் ஆயிரம் வீரர்களை இந்தியா வான்ப்படை கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதின் விளைவாக 85 ஆண்டுகளானதையோட்டி இன்று நாடுமுடுவதுமுள்ள விமானப்படைத் தளங்களில் சிறப்பு கொண்டாட்டங்கள் வீரர்களின் தியாகங்கள் நினைவு கூரப்படுகின்றன.
2 ஆம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படைக்கு 1950ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை என பெயர் மாற்றம் செய்தனர். உலக அளவில் 4-வது இடத்தில் உள்ள இந்திய விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில், வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் விமானப்படையை பலப்படுத்த அதிநவீன நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
0 Comments