டெக்னாலஜி வேகத்தில் தகவல்கள் ஒட்டு கேட்கபடுதல் பிரச்சனை உலகம் முழுவதும் இருக்கின்றது. பேஸ் புக்கில் தகவல்கள் எடுத்தல் சர்ச்சை இருந்தது. அதனை தாண்டி வாட்ஸ் ஆப்பிலும் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற தகவல்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றது.
உலக அளவில் மொத்தம் 20 நாடுகளில் உள்ள வாட்சப்கள் ஹேக் செய்யப்படுவதாகவும். அவற்றில் இந்திய நாடும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள சில பயனாளர்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக மே மாதமே இந்திய அதிகாரிகளை எச்சரித்து விட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன், சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியானது.
பெகாசஸ் என்ற இஸ்ரேலிய ஸ்பைவேர் மென்பொருள் மூலம் அவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறி இருந்தது. இந்தியர்கள் பலர் உளவு பார்க்கப்பட்டதாக கூறியதால், இது பற்றி நவம்பர் 4ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதற்கு பிறகு வாட்ஸ்ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர் இந்தியாவிற்கு அளித்துள்ள விளக்கத்தில், 'பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
மேலும் இந்தியர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவது குறித்து மே மாதமே இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்க அறிவித்திருந்தோம்', என அறிவித்துள்ளது.
சர்வதேச அரசு அமைப்புக்களிடமும் இதை வலியுறுத்தி இருந்தோம். என்எஸ்ஓ எனப்படும் உளவு மால்வேர் சமுக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில முக்கிய நபர்களின் கணக்கர்களின் தகவல்களை குறிவைப்பதாக நாங்கள் கண்டறியந்த உடனேயே கோர்ட்டில் தெரிவித்து விட்டோம் என அறிவித்துள்ளனர்.
இந்திய அரசின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். பயனார்கள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வாட்ஸ் ஆப் தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மேலும் என்எஸ்ஒவும் இதனை ஒப்புகொண்டு அரசுகளுக்கு மட்டுமே தாங்கள் தகவல்களை தருவதாக கூறியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதும், இது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து பிஜேபி அரசு தாங்கள் இந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என அறிவித்துள்ளது.
0 Comments