திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இறந்து மீட்கப்பட்டார். சஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுஜித்தின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி தம்பதியரை சந்தித்து பொதுமக்கள் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
சுஜித் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்தேக மரணம் (இ.பி.கோ.174) என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சுஜித்தை மீட்க அரசு தரப்பில் ரூ.10 கோடிக்கு மேல் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதையறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுஜித் மீட்பு பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க முடியாவிட்டாலும், தற்பொழுது புதிய, புதிய கருவிகளை பட்டறை நடத்துபவர்கள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். பட்டறை ஆட்கள் செய்யும் இந்த வகை கண்டுபிடிப்புகள் மீண்டும் இந்த தவறு நடக்கவிடாது என்பது உறுதி செய்கின்றது. மெத்த படித்த நாமெல்லாம் இதனால் தான் சுஜித் இறந்தார், இப்படிதான் இறந்தார் என சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரப்பி கல்லாகட்டி வருகையில், அனுபவ அறிவை வைத்து கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்கின்றன.
சமூகத்தில் சுஜித் என்ற இளம்பிஞ்சின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்கள் போராட்டமானது பல்வேறு கருத்துக்கள் சர்ச்சைகளை கிளிப்பினாலும், ஆக்கபூர்வமாக கண்டுபிடிப்புகள் மகிழ்ச்சியையும் மீண்டும் இன்னொரு சுஜித்தை இழக்க மக்கள் தயாராக இல்லை என்பதை தெரிவிக்கின்றது ஒரு பிரச்சனையில் இருந்து எவ்வாறு நாம் நம்மை காத்துக் கொள்கின்றோம் என்ற நடவடிக்கைகள் போதுமானது தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கலாம்.
0 Comments