வெழுத்து வாங்கும் கனமழை மத்திய பிரதேசத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு!

வெழுத்து வாங்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு அடைந்துள்ளது.  மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 46,000 பேர் மாயமாகியுள்ளனர். மேலும் அதிகமான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேசத்தின் நீமுச் மற்றும் மண்ட்சவுர் ஆகிய 2 மாவட்டங்கள்  கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்தால் என்னவாகும் என்ற பீதியில் மக்கள் வாழ்கின்றனர். 

நூற்றுக்கணக்கான  கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் காலி செய்யப்பட்டுள்ளனர். பேயாக பெய்யும்  கனமழையால் பல பகுதிகளில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் மாநிலத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அனணயின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களான மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, உத்தர பிரதேசதம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பெய்து வரும் கனமழையால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments