இஸ்ரோவுக்கு கைக்கொடுக்கும் நாசா

உலக  நாடுகள் மெச்ச நடைபெற்ற சிறப்பு மிக்க சந்திராயன் 2 ராகெட் நிலவில் தென்பகுதியின்  தரையிரங்க அனுப்ப பட்டது.இஸ்ரோவின் சந்திரயான் – 2, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு  காரணமாக சமிக்ஞையை இழந்து நின்றது  லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தேவையான வேகத்தை விட அதிக வேகத்தில் கீழிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் சந்திரயான் 2 தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. அதனிடம் இருந்து சமிக்ஞைகளை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் ரோபாட் கருவிகள் தானாகவே சிக்னல்கள் அனுப்பக் கூடியவை.   அருகில்  விண்வெளி மையம் அல்லது செயற்கைக் கோள்களால் சிக்னல்கள் பெற்று அனுப்பலாம்.
மேலும் இது 14 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருப்பதால் வரும் இரண்டு வாரங்களில் முழுமையாக சிக்னல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்பு நிலவில் நிலவும் அசாதாரண குளிர் காரணமாக வேலை செய்யாமல் போகும்.
 
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிக்குக் கைக்கொடுக்கும் விதமாக நாசாவும் பங்கு கொண்டுள்ளன. இஸ்ரோவின் ஒப்புதலைப் பெற்று விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா முயற்சி செய்து வருகிறது.
 நாளை (செப்.17) விக்ரம் லேண்டர் குறித்த புதிய தகவலை நாசா வெளியிடும் என தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதன்பின் முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெறலாம்.

நாசாவின் சந்திர புலனாய்வு ஆர்பிட்டரான (எல்.ஆர்.ஓ) விக்ரம் லேண்டரை படம் எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும், என்று LRO ன் திட்ட விஞ்ஞானி நோவா பெட்ரோ மேற்கோளிட்டு  கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.

சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருந்தால் நிலவின் ஒரு பகல் பொழுது(Lunar Day) மட்டுமே அங்கு ஆராய்ச்சி செய்திருக்கும். அதாவது 14 நாள்கள், அதன்படி வரும் செப்டம்பர் 20, 21-ம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் நாசாவும் இணைந்து நாளை சில தகவல்களை வெளியிட இருக்கிறது.
 
 
 
சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவின் பாதையை  தொடர்ந்து 7 வருடங்களுக்கு மேல் சுற்றி வரவுள்ளது. நமது இந்த பயணம் மட்டுமல்ல அடுத்தடுத்த இஸ்ரோவின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும் என  நம்படுகின்றது. 
 
இஸ்ரோவின் சாதனைக்காக விடிய  விடிய மக்கள் தூங்காமல் காத்திருந்தனர். ஊடகங்களின் அப்டேட்கள் ஒரு பக்கம், இளைஞர்களின் ஆர்வங்கள் ஒரு பக்கம், உலகமே கவனிக்க உழைத்துக் கொண்டிருந்த இஸ்ரோ ஆய்வாளர்கள் மறுபக்கம் என சாதனைத் தருணத்தினை எதிர்நோக்கி இருக்க. இறுதிகட்ட வெற்றி வாய்ப்பினை நூலிலையில் தவற விட்டோம். லேண்டர் 2 கிமி தொலைவில் தனது தொடர்பை துண்டித்தது. இருப்பின் நிலவின் தென் பகுதியில் கரடு முரடு நிறைந்த  பகுதியில் இந்தியா இறங்கிய முயற்சியானது என்றும் பெருமிதப் படக்கூடிய ஒன்று என நாடு முழுவதும் இஸ்ரோ மற்றும் சந்திராயன் 2 தலைவர் சிவனுக்கு ஆதரவு கரங்கள் உயர்ந்தன என்பது குறிப்பிடத் தக்கது ஆகும்.

Post a Comment

1 Comments

  1. your site is very nice, and it's very helping us this post is unique and interesting, thank you for sharing this awesome information. and visit our blog site also
    Apna Tv
    tipsontechnology
    learn every time new tips on technology
    Hey my audience, in this website we’ll post about many tips on technology. many tips on hacking, education and many entertainment niche. i’ll post something special for you, Everyday
    So check out it from here
    tipsontechnology
    learn every time new tips on technology

    ReplyDelete